கெளதம் கம்பீரின் மனித நேயத்தை வியக்கும் ரசிகர்கள்! உடனே ரிப்ளை கொடுத்த இந்திய ராணுவம்

கம்பீரின் இந்த செயலுக்கு சமூக தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது

டெல்லியில் பதாகை ஏந்தி, உதவி கேட்ட இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரருக்கு கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் ட்விட்டர் மூலம் உதவி செய்துள்ளார்.

டெல்லியில் கன்னாட் பகுதியில், கையில் ஒரு பதாகையுடன் பீதாம்பரன் என்ற இந்திய முன்னாள் ராணுவ வீரர் உதவி கேட்டு வந்துள்ளார். அந்த பதாகையில், “முன்னாள் ராணுவ வீரர். 1965-71 காலக்கட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் போரில் பங்கேற்றுள்ளேன். அண்மையில் விபத்து ஏற்பட்டது. மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. உங்கள் உதவி தேவை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனிடையே, பீதாம்பரன் பதாகையுடன் நிற்கும் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். மேலும், பீதாம்பரம் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதற்கான அடையாள அட்டையும் வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். சில, தொழில்நுட்பக் காரணமாக அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, பீதாம்பரனுக்கு உடனடியாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என இந்திய ராணுவம் சார்பில் அதிகாரி ஒருவர் பதில் அளித்தார். அதற்கு நன்றி தெரிவித்த கம்பீர், பீதம்பரனுக்கு இந்திய ராணுவம் செய்யும் உதவி குறித்து தெரிவித்தமைக்கு நன்றி என்று கூறினார்.

கம்பீரின் இந்த செயலுக்கு சமூக தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க – ராஸ் டெய்லர் செய்த மிகப்பெரிய தவறு! 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close