Advertisment

கம்பீருக்கு 'தோனி' மீது அப்படி என்ன தான் கோபம்…? இப்போ ஏன் இப்படி சொல்லிருக்காரு?

CSK Captain MS Dhoni missed out on Gautam Gambhir's retentions list Tamil News: ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தக்க வைக்கப்படவுள்ள வீரர்கள் தொடர்பாக பேசியுள்ள முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர், சென்னை அணியின் கேப்டன் தோனியின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir Tamil News: Gambhir picks his 4 retentions for csk but leaves ms dhoni

Cricket news tamil: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு (2022) தொடங்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில், தொடரில் ஏற்கனவே பங்கேற்று விளையாடி வரும் 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

Advertisment

மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் அணியில் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இன்று சமர்ப்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிசிசிஐ விதிகளின்படி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

publive-image

எனவே, எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் என்பதை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து இன்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் நிர்வாகம் நடத்தும் இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

IPL 2022 mega auction Tamil News: CSK likely to retain Dhoni for three seasons

தொடரில் பங்கேற்கவுள்ள 10 அணிகளில் எந்தெந்த அணி யாரை விடுக்கவுள்ளது மற்றும் தக்கவைத்துக்கொள்ள உள்ளது என்பது குறித்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், டெல்லி எம்.பி.யாக இருக்கும் முன்னாள் அதிரடி வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்தை தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

publive-image

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து அவர் பேசுகையில், இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்தர ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண் ஆகிய 4 வீரர்களை மட்டும் தான் அந்த அணி தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றும், மற்ற வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

publive-image

இந்த பட்டியலில் கம்பீர் சென்னை அணியின் கேப்டன் தோனியின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. சென்னை அணியை நீண்டகாலமாக வழிநடத்தி வரும் கேப்டன் மகேந்திர சிங் தோனி அந்த அணி 4 முறை கோப்பையை வெல்ல உதவியிருக்கிறார். மேலும் சென்னை அணியின் முகம் என்றால் அது தோனி தான் என்று கூறும் அளவிற்கு அவரின் தாக்கம் அணி நிர்வாகத்திலும் உள்ளது.

தவிர, தோனி தான் அடுத்த 3 சீசன்களுக்கும் கேப்டன் தொடர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் கம்பீர் இப்படி கூறியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எரிச்சல் மூட்டியுள்ளது. இது தொடர்பாக ரசிகர்கள் தங்கள் கருத்தை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

publive-image

தோனியின் பார்ம் சற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர் அணியை வழிநடத்தி முக்கிய போட்டிகளில் ரன் குவித்துவிடுவார் என்று குறிப்பிட்டுள்ள அவரது ரசிகர்கள் சென்னை அணி நிர்வாகமே தோனியை தான் தாங்கள் முதல் வீரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும், வேண்டும் என்றே கம்பீர் அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தோனியை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத் தான் அவரை கம்பீர் தேர்வு செய்யவில்லை என்றும், உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற முறையில் யாராவது பாராட்டினால், நானும் தான் ரன் அடித்தேன் என்று வெளிப்படையாக கேட்கும் அளவிற்கு கம்பீர் தோனி மீது பொறாமை கொண்டவர் என்றும் ரசிகர்கள் கம்பீர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl Ipl Cricket Ipl News Csk Ms Dhoni Ipl Auction Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment