hair dryer, iron boc, vacuum cleaner used dry pitch ind vs sl 1st t20 virat kohli - INDvsSL: ஹேர் டிரையர், அயர்ன் பாக்ஸ் - கிண்டலுக்கு ஆளான பிசிசிஐ, கோலி ஷாக்! (வீடியோ)
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்னப்பா இவ்ளோ காமெடி பீஸா இருக்கீங்களே-னு உலக அளவில் ட்ரோல் ஆகி வருகிறது பிசிசிஐ.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று(ஜன.5) அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியது. மழை நின்ற பிறகு, பிட்சில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. மீண்டும் மழை பெய்து ஓய, வேக்குவம் கிளீனரை வைத்து ஆடுகளத்தை காய வைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அதன் பிறகு அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர், வேக்குவம் கிளீனர் மூலமும் ஆடுகளத்தை உலர வைக்க முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும், பிட்சை குறிப்பிட்ட நேரத்திற்குள் தயார் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து, போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம், பிட்சை உலர்ப்படுத்த முடியை உலர வைக்கும் ஹேர் டிரையர், துணியை அயர்ன் செய்யும் அயர்ன் பாக்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி இருக்கிறார்களே! இந்தியாவின் அந்த ஹேர் டிரையர் அவ்வளவு சக்தி வாய்ந்ததா? என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, வேக்குவம் கிளீனர் பயன்படுத்தி பிட்சை உலர வைக்கும் பணியை கவனித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலியே அதிர்ச்சி அடைந்து அது குறித்து கேட்டறிந்தார்.
Shame. It's shame. Virat Kohli surprised to see at Assam Cricket Association using Hair dryer, Iron, Vacuum cleaner to dry the pitch of Barsapara Stadium at Guwahati. And match #INDvSL finally declared abandoned. pic.twitter.com/DtZO0sNusV