Advertisment

வரலாற்று நாயகன் தோனி…. "கேப்டன் கூல்" கொடுத்த முக்கிய தருணங்கள்!

Happy Birth Day Dhoni, M.S.Dhoni turns 41 Tamil news: இந்திய தேசிய அணிக்காகவும், தான் நேசிக்கும் சிஎஸ்கே-வுக்காகவும் உயிரையும், உழைப்பையும், தனது ஒட்டுமொத்த திறனையும் வாரிக்கொடுத்த தோனி என்கிற மாவீரனின் பிறந்த தினம் இன்று.

author-image
Martin Jeyaraj
New Update
Happy Birth Day Dhoni, M.S.Dhoni turns 41, 5 unforgettable moments of MSD

தோனி

Happy Birthday MS Dhoni 5 Moments That We Cannot Forget Dhoni In Lifetime: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. ஏனெனில், இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்தது.

Advertisment

கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் படைத்துள்ள சாதனைகள் ஏராளம்.

publive-image

தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்று வழிநடத்தி வரும் அவர், இன்னும் சாதனை படைக்கும் ஓட்டத்தில் ஒருவராகவே இருக்கிறார். ஒரு கேப்டனாக அவரின் ஆளுமைக்கும், களத்தில் கூலாக இருந்து சாதிக்கும் அவரின் திறமைக்கும் உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தவிர, தற்போது கிரிக்கெட் ஆடும் இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார்.

தோனியை மறக்க முடியாத ஐந்து தருணங்கள்:-

publive-image

இந்திய தேசிய அணிக்காகவும், தான் நேசிக்கும் சிஎஸ்கே-வுக்காகவும் உயிரையும், உழைப்பையும், தனது ஒட்டுமொத்த திறனையும் வாரிக்கொடுத்த தோனி என்கிற மாவீரனின் பிறந்த தினம் இன்று. அதை தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் கொண்டாடினார் தோனி. அவருக்கு அவரது தீவிர ரசிகர்களும், முன்னாள் வீரர்களும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

publive-image

இந்நிலையில், தோனியை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நாம் மிகவும் நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத ஐந்து தருணங்களை இங்கு சுருக்கமாக பார்க்கலாம்:

2007 டி20 உலகக் கோப்பை வெற்றி

2007 ஆம் ஆண்டில் தான் முதன்முதலாக ஐசிசி-யின் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க மண்ணில் நடந்த இத்தொடரில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி களமாடியது. பல மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில், கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா கோப்பையை முத்தமிட்டது.

publive-image

கேப்டன் தோனி களத்தில் நிதானத்தையும், அமைதியையும் தந்திரத்தையும் கடைபிடித்து ஆட்டத்தை கடைசி ஓவரை வரை கொண்டு சென்றார். மேலும், அவர் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மா மீது நம்பிக்கை காட்டினார். 157 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய பாகிஸ்தான் 152 ரன்னிலே சுருண்டது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் இந்தியா 1983 க்குப் பிறகு மற்றொரு உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. கிரிக்கெட் உலகம் யார் இந்த தோனி? என்று தேடத் தொடங்கியது.

publive-image

டெஸ்ட் போட்டியில் உலகின் நம்பர் ஒன்

2003 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா 2009 ஆம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டி இருந்தது. கேப்டன் கூல் இரண்டு சதங்கள் அடித்த இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் தொடரில் முதன் முறையாக உலகின் நம்பர் ஒன் அணியானது இந்தியா.

publive-image

2011 உலகக் கோப்பை வெற்றி

ஐசிசி 2011 ஆம் நடத்திய ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. 274 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 114 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து யுவராஜ் சிங் - தோனி ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. 11 பந்துகள் மீதமிருக்க தோனி தனது பாணியில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார்.

publive-image

இந்த மாபெரும் வெற்றியின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றி வரலாறு படைத்தது. சிக்சருடன் ஆட்டதை வென்ற தருணத்தை எந்த ஒரு தோனியின் ரசிகராலும் மறக்க முடியாது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம்

2013 ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்தது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் தோனி விராட் கோலியுடன் இணைந்து 128 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதோடு, 200 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருந்த இந்திய அணிக்காக சிறப்பாக ரன் வேட்டை நடத்தினார். அரைசதம், சதம் என விளாசி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தோனி.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் லோ-ஆடர் பேட்ஸ்மேன்களுடன் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களை குவித்தார். தனது அதிரடி ஆட்டத்தால் இரட்டை சதம் அடித்த தோனி 266 பந்துகளில் 6 சிக்ஸர் 24 பவுண்டரிகளுடன் 224 ரன்கள் எடுத்தார். அவரது இந்த அசத்தல் ஆட்டம் இந்திய அணிக்கு உத்தவேகம் அளிக்கவே தொடரை 4-0 என்கிற கணக்கில் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது.

2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றி

2013 ஆம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. தொடக்க வீரர் ரோகித் அணிக்கு ஏமாற்றம் அளித்தாலும் களத்தில் இருந்த ஷிகர் தவான் (31) மற்றும் விராட் கோலி (43) புதிய தொடக்க பார்ட்னர்ஷிப்பை அமைத்து, அணிக்கு சிறப்பான அடித்தளம் கொடுத்தது. ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா 33 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. அணியின் டாப் வரிசை வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தாலும், இயோன் மோர்கன் (33) - ரவி போபாரா (30) ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இது இந்திய அணிக்கு பேரச்சத்தை கொடுத்தது. ஆனாலும், கேப்டன் தோனி கூலாக சமாளித்தார்.

தனது முந்தைய ஓவரில் 11 ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவிடம் தோனி கடைசி ஓவரைக் கொடுத்தார். அந்த ஓவரில் இயோன் மோர்கன் - ரவி போபாரா ஜோடி உடைத்து, அந்த இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை எடுத்த இஷாந்த் ஷர்மா கேப்டனின் நம்பிக்கையை பெற்றார். ஆட்டத்தை தோனி தனது சிறப்பான தந்திரத்தால் வென்று கொடுத்தார். இந்திய அணி கோப்பையை முத்தமிட்டது.

publive-image
publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Ipl Cricket Ms Dhoni
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment