ஹர்திக் பாண்டியாவுக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துகள்

ஹர்திக் பாண்டியா தனது குழந்தையின் கரங்களை தாங்கி கொண்டிருப்பதை புகைப்படத்தில் காண முடிகிறது.

By: July 30, 2020, 8:02:57 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா,அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் இன்று, மகிழ்ச்சியுடன் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர். இந்த நல்ல  செய்தியை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில்,  பகிர்ந்த கொண்ட பாண்ட்யா,“எங்கள் ஆண் குழந்தையுடன் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுகிறோம்” என்றார்.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில், நடாசா ஸ்டான்கோவிக்குடன் கைக்கோர்த்து நிற்கும் படத்தை, ஹர்திக் பாண்டியா  தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு, “Starting the year with my firework ❣️” என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த மே மாதத்திழ்க், ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராமில்,”நடாசாவும் நானும் சேர்ந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு புதிய உறவை மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் வரவேற்க நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு செல்ல நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் ஆசீர்வாதங்களையும் விருப்பங்களையும் நாடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

 

 

View this post on Instagram

 

Natasa and I have had a great journey together and it is just about to get better ???? Together we are excited to welcome a new life into our lives very soon. We’re thrilled for this new phase of our life and seek your blessings and wishes ????

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

 

 

வாழ்க்கையின் புதிய தொடக்கத்தை ஆரம்பித்த ஹர்திக் பாண்டியாவுக்கும், அவரது துணைவியாருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

 

 

 

 

ஹர்திக் பாண்டியா தனது குழந்தையின் கரங்களை தாங்கி கொண்டிருப்பதை புகைப்படத்தில் காண முடிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Hardik pandya natasa stankovic welcomed their first child hardik pandya blessed with baby boy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X