Advertisment

T20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்; இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

ENG vs PAK: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
T20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்; இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

Advertisment

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இன்று (நவம்பர் 13) பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகியது.

டி20 கிரிக்கெட் லீக் சுற்றில் குரூப் ஏ, குரூப் பி எனப் பிரிந்து போட்டியிட்டன. இதில் குரூப் ஏ, குரூப் பி அணியில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. குரூப் ஏ-யில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் பி-யில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் முன்னேறின.

அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதின. இதில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு நுழைந்தன. இந்தியாவுடனான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறையாகும். கடந்த காலங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளும் தங்கள் அரையிறுதி போட்டியில் விளையாடிய வீரர்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்

பாகிஸ்தான்: பாபர் ஆசாம் (c), முகமது ரிஸ்வான் (wk), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அஃப்ரிடி

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (c & wk), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித்

பாகிஸ்தான் பேட்டிங்

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் சாம் கரண் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஹாரிஸ் 8 ரன்களில் ரஷீத் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மசூத் களமிறங்கி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அணியின் எண்ணிக்கை 84 ஆக இருந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த கேப்டன் பாபர் ஆசாம் 32 ரன்களில் அவுட் ஆனார். அவர் ரஷீத் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய இப்திகார் டக் அவுட் ஆனார். அவர் ஸ்டோக்ஸ் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 85 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து ஷதாப் கான் களமிறங்கி சற்று அதிரடி காட்டினார். இருப்பினும் 20 ரன்களில் ஜோர்டன் பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த நவாஸ் 5 ரன்களில் சாம் கரண் பந்தில் லிவிங்ஸ்டோன் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வாசிம் 4 ரன்களில் அவுட் ஆனார். அவர் ஜோர்டன் பந்தில் லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாகீன் அப்டிரி 5 ரன்களிலும், ரவுஃப் 1 ரன்னிலும் இருக்கும்போது பாகிஸ்தான் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில், சாம் கரண் 3 விக்கெட்களையும், ரஷீத் மற்றும் ஜோர்டன் தலா 2 விக்கெட்களையும், ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து பேட்டிங்

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். அலெக்ஸ் ஹேல்ஸ் முதல் ஓவரின் கடைசிப் பந்திலே 1 ரன்னில் வெளியேறினார். அவரை ஷாகீன் அப்ரிடி போல்டாக்கினார். ஒருபுறம் பட்லர் அதிரடி காட்ட, மறுபுறம் களமிறங்கிய சால்ட் நிதானமாக விளையாடினார். 10 ரன்கள் எடுத்தப்போது சால்ட் அவுட் ஆனார். அவர் ரவுப் பந்தில் இப்திகாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் பட்லருடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். பட்லர் 26 ரன்கள் அடித்திருந்த நிலையில், ரவுப் பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது.  

அடுத்து களமிறங்கிய ப்ரூக் நிதானமாக கம்பெனி கொடுக்க, ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி ரன் சேர்த்து வந்தார். அணியின் எண்ணிக்கை 84 ஆக இருந்த நிலையில் பரூக் 20 ரன்களில் அவுட் ஆனார். ஷதாப் கான் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மொயீன் அலி தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். இருப்பினும் வாசிம் அவரை 19 ரன்களில் போல்டாக்கினார். அடுத்ததாக லிங்க்ஸோடன் களமிறங்கி 1 ரன் அடித்த நிலையில், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பட்லர் 52 ரன்கள் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி 19 ஒவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. பாகிஸ்தான் தரப்பில் ரவுப் 2 விக்கெட்களையும், அப்ரிடி, ஷதாப், வாசிம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 2 ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

Cricket T20
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment