ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு டி.எஸ்.பி பதவி: பஞ்சாப் அரசு

முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு டி.எஸ்.பி பதவி வழங்க பஞ்சாப் மாநில அரசு முன்வந்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வெல்லும் என ஆவலுடன் காத்திருந்தனர் இந்திய ரசிகர்கள். ஆனால், இறுதிப்போட்டில் இங்கிலாந்து அணியுடன் நடந்த ஆட்டத்தில் துரதிஷ்டவசமாக இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் உலகக்கோப்பையை கனவு நழுவவிப்போனது.

எனினும், இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய வீராங்களைகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பூணம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் முன்றாவது விக்கெட் பார்னர்ஷிப்பில் 95-ரன்கள் குவித்தனர். இந்த போட்டியின் போது அரைசதம் அடித்தும் அசத்தினார் ஹர்மன்ப்ரீத் கவுர். இந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசு, அம்மாநில காவல்துறையில் ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு டிஎஸ்பி பதவி வழங்க முன்வந்துள்ளது. முன்னதாக, ஹர்மன்ப்ரீத் கவுர்-க்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய வீராங்கனை பாராட்டும் வகையில், வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close