”நான் தோற்பது என்று வந்துவிட்டால் அது தோனியிடம்தான் தோற்க வேண்டும். அதில் எனக்கு பெருமைதான்’ என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் 2023 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 170 முதல் 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், சென்னை அணியின் பந்து வீச்சு இருந்தது.
தொடக்க வீரர்களாக சகாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹிர்திக் பாண்டிய 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இந்நிலையில் 15 ஓவரில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசி பந்து வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் குஜராத் அணியின் அணி, சென்னை அணிக்கு எதிராக நன்றாகவே விளையாடியது. குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 96 ரன்களும், சஹா 54 ரன்களும் சுப்மன் கில் 39 ரன்களும் எடுத்து அசத்தலாக விளையாடினர். கடைசி ஓவரில் மோகித் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்
இந்நிலையில் போட்டி நிறைவடைந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேசியதாவது : “ தோனிக்காக நான் மகிச்சியடைகிறேன். விதி அவருக்காக எழுதப்பட்டுவிட்டது. நான் தோல்வியடைந்தால், அது தோனிடம் தோல்வி அடைய வேண்டும் .அது எனக்கு பெருமை. நல்ல மனிதர்களுக்கு நல்லதுதான் நடக்கும். நான் சந்தித்த மனிதர்களில் சிறப்பான மனிதர் அவர்தான். இறைவன் இரக்கமானவர். கடவுள் என்னிடத்திலும் இரக்கம் காட்டினார். ஆனால் அது தோனிக்கான இரவு.
எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கிறது. நாங்கள் ஒன்றாக வெற்றியடைவோம். ஒன்றாக தோல்வியடைவோம். தோல்விக்கு இதுதான் காரணம் என்று நான் எதையும் குறிப்பிட விரும்பவில்லை. சி.எஸ்.கே நேற்று ஒரு சிறப்பான கிரிக்கெட் விளையாட்டை வெளிப்படுத்தியது. நாங்கள் அனைவரும் சிறப்பாக பேட்டிங்0 செய்தோம். குறிப்பாக சாய் சுதர்ஷனை தனியாக குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற நெருக்கடியான சூழலில் விளையாடுவது எளிதல்ல. மோஷித் ஷர்மா, ரஷித் கான், மொகமத ஷமி ஆகிய அனைவரும் சரியான பங்களிப்பை வழங்கினர். நாங்கள் எங்கள் மனதிலிருந்து விளையாடினோம். நேற்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றிகரமாக எதிர்த்து விளையாடியதை நினைத்து பெருமைகொள்கிறேன்” என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil