Advertisment

'பாக்., அணியில் நிராகரிப்பு; பெரும் ஏமாற்றம்' - இம்ரான் தாஹிர் வேதனை

பாகிஸ்தானை விட்டு வெளியேறுவது கடினமாக இருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பாக்., அணியில் நிராகரிப்பு; பெரும் ஏமாற்றம்' - இம்ரான் தாஹிர் வேதனை

தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிய பெருமை என் மனைவியைச் சாரும்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான இம்ரான் தாஹிர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து தன் வேதனையை அவர் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து ஜியோ ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் லாகூரில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். நான் இன்றிருக்கும் இருக்கும் இடத்தில் அது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. எனது பெரும்பாலான கிரிக்கெட்டை நான் பாகிஸ்தானில் விளையாடினேன், ஆனால் பாகிஸ்தான் அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது குறித்து நான் ஏமாற்றமடைகிறேன்".

இந்திய ஆல் ரவுண்டர்களின் தரம் அவ்ளோதானா? – பதான் டீவீட், ரசிகர்கள் கோபம்

தாஹிர் 2005 வரை லாகூரில் வாழ்ந்தார், இளையோர் கிரிக்கெட் மற்றும் பாகிஸ்தான் U-19 அணியிலும், பாகிஸ்தான் A அணியிலும் கூட இடம் பெற்றார். இருப்பினும், பாகிஸ்தான் சர்வதேச அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை.

"பாகிஸ்தானை விட்டு வெளியேறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடவுள் என்னை ஆசீர்வதித்தார், தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிய பெருமை என் மனைவியைச் சாரும்" என்று தாஹிர் கூறினார்.

ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம் – நிர்வாகக் குழு தலைவர் தகவல்

தென்னாப்பிரிக்கப் பெண்ணான சுமய்யா தில்தாரை மணந்த தாஹிர், 2005 ஆம் ஆண்டில் அந்நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. தாஹிருக்கு அப்போது 26 வயதாக இருந்தது. தென்னாப்பிரிக்காவில் நான்கு வருடம் வசித்த பிறகு, விதிகள் படி அவர் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாட தகுதி பெற்றார்.

தற்போது 41 வயதான இம்ரான் தாஹிர், டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல்-ல் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் வீழ்த்திவிட்டால், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடுவது இவரது டிரேட்மார்க் ஸ்பெஷல்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Ipl Imran Tahir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment