Advertisment

India vs Australia Live Score: இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ் ஸ்கோர்

Ind vs Aus 1st ODI Live Cricket Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Aus 1st ODI Live Cricket Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

Ind vs Aus 1st ODI Live Cricket Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

India vs Australia 1st ODI Live Cricket Score: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

Advertisment

டி20 தொடரை 2-0 என முழுமையாக வென்ற பிறகு, ஆஸ்திரேலிய அணி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஒருநாள் தொடரில் களம் காணுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஹைதராபாத்தில் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது.

சொந்த மண்ணில், டி20 தொடரில் வாஷ் அவுட் ஆகியிருப்பதால், இந்திய வீரர்கள், ஒருநாள் தொடரில் மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதேசமயம், கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு புத்துணர்ச்சியுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

குறிப்பாக, நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலி, 'ஐபிஎல் தொடரில் வீரர்கள் எவ்வளவு சாதித்தாலும், வரவிருக்கும் உலகக் கோப்பைக்கு எது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதை வைத்து வீரர்களின் தேர்வு இருக்காது" என்று தெரிவித்திருக்கிறார். ஆகையால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் தொடர், தனிப்பட்ட ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமானதாக அமைகிறது. (தோனி உட்பட)

Aus vs Ind 1st ODI Live Score: இந்தியா, ஆஸ்திரேலியா லைவ்

8:50 PM: 43 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை சேர்த்திருக்கிறது. டோனி 44 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 42 பந்துகளில் இந்தியா வெற்றிக்கு 43 ரன்கள் தேவை!

8:30 PM: 38 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. டோனி 39 ரன்களுடனும், ஜாதவ் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி பெற இந்தியாவுக்கு 72 பந்துகளில் 69 ரன்கள் தேவை! கைவசம், 6 விக்கெட்டுகள்!

8:00 PM: 33 ஓவர்கள் முடிவில் 133 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருக்கிறது. டோனி 15 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 21 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

7:20 PM: விராட் கோலியை வீழ்த்திய சம்பா, அம்பத்தி ராயுடுவையும் 13 ரன்களில் விழ்த்தினார். 24 ஓவர்களில் இந்தியா 100 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. டோனி, கேதர் ஜாதவ் களத்தில் நின்றனர்.

7:15 PM: 237 ரன்கள் இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணிக்கு, ஷிகர் தவான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் அணியின் ஸ்கோரை நகர்த்தினர்.

இந்தியா ஸ்கோர் 80 ஆனபோது விராட் கோலியும் (44 ரன்கள்), 95 ரன்கள் ஆனபோது ரோஹித் சர்மாவும் (37 ரன்கள்) அவுட் ஆனார்கள். 20.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்தது. டோனியும், அம்பத்தி ராயுடுவும் அடுத்து கரம் கோர்த்தார்கள்.

5:00 PM: 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவுக்கு 237 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 50 ரன்கள், ஸ்டோனிஸ் 37, மேக்ஸ்வெல் 40, அலெக்ஸ் காரே ஆட்டமிழக்காமல் 36, நாதன் கோல்டர் 28, ஆச்டன் டர்னர் 21, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 19 ஆகியோர் இரட்டை இலக்கத்தை தாண்டினர்.

ஆபத்தான மேக்ஸ்வெல், டர்னர் ஆகியோர் விக்கெட்டுகளை முகம்மது ஷமி கிளீன் போல்ட் முறையில் கைப்பற்றி, மிடில் ஆர்டரை சீர்குலைத்தார். கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் என இரு முக்கிய விக்கெட்டுகளை குல்தீப் யாதவும், ஆரோன் பிஞ்ச், நாதன் கோல்டர் ஆகியோர் விக்கெட்டுகளை பும்ராவும் வீழ்த்தினார்கள். ஸ்டோனிஸ் விக்கெட்டை கேதர் ஜாதவ் கைப்பற்றினார்.

04:10 PM - கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆஷ்டன் டர்னர் ஆகியோரை ஷமி அடுத்தடுத்து போல்டாக்கினார். இதனால், ஆஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

03:40 PM - பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 19 ரன்னில் குல்தீப் ஓவரில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

03:20 PM - டி20 நாயகன் கிளென் மேக்ஸ்வெல் மட்டும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

03:10 PM - பூஜ்யம் ரன்னில் விக்கெட் இழந்தபிறகு நம்பிக்கையான பார்ட்னர்ஷிப் அளித்த ஸ்டாய்னிஸ், 37 ரன்களை கேதர் ஜாதவ் ஓவரில் அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜா குல்தீப் ஓவரில் கேட்ச் ஆனார்.

02:30 PM - உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் நிதானமாக அடி, 50+ பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்.

01:35 PM - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் 0 ரன்னில், பும்ரா ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

01:3o PM - இந்திய அணி வீரர்கள் விவரம்

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (c), அம்பதி ராயுடு, எம் எஸ் தோனி (w), கேதர் ஜாதவ், விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா.

01:02 PM - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment