Advertisment

மரண பயம் காட்டிய அயர்லாந்து: இந்திய பந்துவீச்சு பலவீனமா?

Deepak Hooda became the fourth Indian to hit a T20 ton Tamil News: இந்தியா சார்பில் கடைசி ஓவரை வீசிய அதிவேக பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக் தனது வேகத் தாக்குதலை தொடுக்கிறார். ஆனாலும், மார்க் ஆடைர் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு பயம் ஏற்படுத்தினார்.

author-image
WebDesk
New Update
IND vs IRE: Ireland gives mighty scare, Is Indian bowling weak?

IND vs IRE 2nd t20i - India defeat Ireland by 4 runs.

IND vs IRE Tamil News: அயர்லாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில் கடந்த 26ம் தேதி ஞாயிற்று கிழமை நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2-வது டி 20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisment

இதனையடுத்து இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் இஷான் கிஷன் 3 ரன்களில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சாம்சனுடன், தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான அதிரடி ஆட்டத்தால் அணியின் ரன்ரேட் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியில் மிரட்டி எடுத்த தீபக் ஹூடா மற்றும் சாம்சன் ஆகிய இருவருமே தங்களது அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

இந்த ஜோடியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த தீபக்ஹூடா, தனது அதிரடியை தொடர்ந்திருந்தார். அதோடு 55 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தையும் பதிவு செய்தார்.

மறுமுனையில் அதிரடி காட்ட துவங்கிய சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்னில் வெளியேறினார். அவரைதொடர்ந்து தீபக் ஹூடாவும் 57 பந்துகளில் 6 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0), அக்சர் பட்டேல் (0), ஹர்சல் பட்டேல் (0) ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

இறுதியில் புவனேஷ்வர் குமார் 1 ரன்னுடனும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் ஆதிர் 3 விக்கெட்டுகளும், கிரீக் யங் மற்றும் ஜோஸ்வா லிட்டில் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தொடர்ந்து 228 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் சார்பில் பால் ஸ்ட்ர்லிங் - கேப்டன் பால்பேர்னே ஜோடி களமிறங்கினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வந்த இந்த ஜோடியில் பால் ஸ்ட்ர்லிங் 40 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், களமிறங்கிய டிலேனி (0) ரன் ஏதும் எடுக்காமலும், மறுமுனையில் சிறப்பாக ஆடிய பால்பேர்னே 34 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 60 (37) ரன்களிலும், லார்சன் டூக்கர் 5 ரன்னிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த ஹேரி டெக்டாருடன், ஜார்ஜ் டாக்ரெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடியாக ஆடி வந்த டெக்டார் (39) புவனேஷ்வர் குமார் வீசிய 17.1 ஓவரில் ஹூடா வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த தருணத்தில் அயர்லாந்தின் வெற்றிக்கு 17 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது களத்தில் இருந்த ஜார்ஜ் டாக்ரெல் - மார்க் ஆடைர் ஜோடி அதிரடி காட்ட தொடங்கினர். புவனேஷ்வர் குமார் ஓவரில் கடைசில் பந்தில் டாக்ரெல் ஒரு பவுண்டரி அடிக்க, ஹர்ஷல் படேல் வீசிய 19 வது ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என்கிற இரண்டு பெரிய ஷாட்டுகளுக்கு செல்கின்றார். இதனால் கடை ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தியா சார்பில் கடைசி ஓவரை வீசிய அதிவேக பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக் தனது வேகத் தாக்குதலை தொடுக்கிறார். ஆனாலும், மார்க் ஆடைர் 2 பவுண்டரிகளை ஓடவிட்டு பயம் ஏற்படுத்தினார். எனினும் உம்ரன் மாலிக் மணிக்கு 142 கி/மீ வேகத்திற்கு மேல் வீசிய அடுத்தடுத்த பந்துகளை மார்க் ஆடைரால் தொட முடியவில்லை. இறுதியில் அயர்லாந்து அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றியை பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், பிஸ்னோய் மற்றும் உம்ரன் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அனுபவமுள்ள வேகப்பந்துவீச்சாளர்கள் கொண்ட இந்திய அணியில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 46 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதேபோல் மிகச் சிறந்த டி-20 வீரர்கள் என பெரியாரிப்பட்ட ஹர்சல் பட்டேல் 4 ஓவர்களில் 54 ரன்களையும், அதிவேக பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக் 42 ரன்களையும், பிஸ்னோய் 41 ரன்களையும் அள்ளிக்கொடுத்தார். இந்த வீரர்கள் டி-20 உலக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்றும், பேக்-ஆப் வீரர்களாக இருப்பார்கள் என்றும் கருத்தப்படும் நிலையில், இவர்களை நெட்பவுலராக கூட இந்திய அணி பரிசீலிக்குமா? என்கிற அளவில் அவர்களின் பந்துவீச்சு இருந்துள்ளது

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team Indian Cricket India Vs Ireland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment