2வது ஒருநாள் போட்டி: 22 ரன்களில் வெற்றி, ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

IND vs NZ 2nd ODI Live Score: இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி லைவ்

IND vs NZ ODI Full Scorecard: 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முழுமையாகத் தோற்ற நியூசிலாந்து, அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்து இரு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.8) ஆக்லாந்தில் தொடங்கியது.

நியூசிலாந்து எதிரான டி20 தொடரை, 5-0 என்று ஒயிட் வாஷ் செய்த பிறகு, கடந்த 5ம் தேதி ஹாமில்டனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், மாஸாக களமிறங்கியது இந்திய அணி. எதிர்பார்த்தது போலவே சிறப்பாக ஆடிய கோலி டீம், 347 ரன்கள் குவிக்க, ‘இவிங்க அடங்கவே மாட்டங்க போல’ மீம்ஸ்கள் பறந்தன.

இந்தியா U19 vs வங்கதேசம் U19 இறுதிப் போட்டி 2020 – போட்டி நேரம், வானிலை, வீரர்கள் விவரம் இங்கே

ஆனால், எல்லாவற்றுக்கும் மொக்கையாக நியூசிலாந்து, 48.1வது ஓவரிலேயே இலக்கை சேஸ் செய்து இந்தியாவுக்கு கொடூர ரிப்ளை கொடுத்தது. இந்தியாவை நியூஸி., ட்ரீட்மென்ட் செய்த விதம், ‘ச்சை’ என்கிற அளவுக்கு சென்றுவிட்டது. இவ்ளோ பெரிய டார்கெட்டையும் இவ்ளோ கேஷுவலா சேஸ் செய்தா எப்படி! என்று கேட்க வைத்துவிட்டார்கள்.

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை எந்த குறையும் இல்லை. பவுலிங்கில் ஷர்துள் தாக்குரால் மறந்தும் ஒரு பெர்சன்ட் தாக்கத்தை கூட ஏற்படுத்த முடியவில்லை. ஆகையால், அவருக்கு பதில் சைனி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். வேறு பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது.

நியூசிலாந்து, முதன் முதலாக இந்த சீரிஸில் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அது ஹைவேஸாக இருக்குமா அல்லது முட்டுசந்தாக முடியுமா என்பது போக போக தெரியும்.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இன்று இந்தியா தோற்றுவிட்டால், தொடரை இழந்துவிடும்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

Live Blog

New Zealand vs India, 2nd ODI Eden Park, Auckland : இந்தியா vs நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி லைவ்














15:40 (IST)08 Feb 2020





















22 ரன்களில் வெற்றி, ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து

48.3 ஓவர்களில் இந்தியா 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரவிந்திர ஜடேஜா 55 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது. ஏற்கனவே முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் முழுமையாகத் தோற்ற நியூசிலாந்து, அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்து இரு ஒருநாள் போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

15:24 (IST)08 Feb 2020





















அசத்திய ஷைனி, அரை சதத்தை நெருங்கி அவுட்

தடுமாறிய இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து ஷைனி நம்பிக்கை அளித்தார். பவுலரான ஷைனி தேர்ந்த பேட்ஸ்மேன் போல ஆடி, 49 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அவர் அவுட் ஆனபோது இந்திய அணி 44.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது.

பின்னர் சாஹல் உள்ளே வந்தார். 47 ஓவர்கள் முடிவில் இந்தியா 246 ரன்கள் சேர்த்தது. வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்டன. ஒரே நம்பிக்கை ஜடேஜா.

14:38 (IST)08 Feb 2020





















தோல்விப் பாதையில் இந்திய அணி

37 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை சேர்த்தது. ரவிந்திர ஜடேஜா 23 ரன்களுடனும், ஷைனி 12 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். தோல்வியின் பிடியில் இந்திய அணி சிக்கியிருக்கிறது.

14:01 (IST)08 Feb 2020





















அரை சதம் அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் அவுட்

29 ஓவர்களில் 136 ரன்களுக்கு இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது. ஓரளவு தாக்குப்பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்து அவுட் ஆனார். ரவீந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் களத்தில் நிற்கிறார்கள். ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியை இழந்த இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-வது போட்டியிலும் தடுமாற்றமான நிலையில் இருக்கிறது.

12:55 (IST)08 Feb 2020





















4 ரன்களில் கே.எல்.ராகுல் அவுட்

அடுத்து கே.எல்.ராகுலும் 4 ரன்களில் கிராண்ட்ஹோம் பந்தில் க்ளீன் போல்ட் ஆனார். 14 ஓவர்களில் 71 ரன்களுக்கு இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டத்தில் நியூசிலாந்தின் கை ஓங்கியது.

12:36 (IST)08 Feb 2020





















15 ரன்களில் விராட் கோலி க்ளீன் போல்ட்

9.4 ஓவர்களில் இந்தியா 57 ரன்கள் எடுத்தபோது டிம் சவுதி பந்தில் விராட் கோலி க்ளீன் போல்ட் ஆனார். கோலி சேர்த்த ரன்கள் 25 பந்துகளில் 15 ரன்கள்.

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் இணைந்து விளையாடி வருகிறார்கள்.

12:13 (IST)08 Feb 2020





















இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட்

5 ஓவர்களில் இந்தியா 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இரு தொடக்க ஆட்டக்காரர்களும் வீழ்ந்தனர். மயங்க அகர்வால் 3 ரன்களுக்கு பென்னட் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து பிரித்வி ஷா 24 ரன்களில் (19 பந்து, 6 பவுண்டரி) ஜேமியசன் பந்தில் க்ளீன் போல்டு ஆனார். ஜேமியசனுக்கு ஒருநாள் போட்டியில் இது முதல் விக்கெட்.

12:10 (IST)08 Feb 2020





















அடுத்தடுத்து 2 விக்கெட்டை பறிகொடுத்த இந்தியா

நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் எடுத்ததையடுத்து, 274 என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்திய அணி. முதலாவதாக ப்ரித்வி ஷாவும், மாயங்க் அகர்வாலும் களம் இறங்கினர். இதில் 3 ரன்கள் மட்டுமே எடுத்த அகர்வால் பென்னெட்டின் பவுலிங்கில், டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் 24 ரன்களில் ப்ரித்வி ஷாவும் அவுட் ஆனார். அதன் படி 4-வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி

12:06 (IST)08 Feb 2020





















இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி

50 ஓவர்களில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்தது. ராஸ் டெய்லர் இறுதி வரை அவுட் ஆகாமல் 73 ரன்கள் சேர்த்தார். 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கைல் ஜேம்சன் 25 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் நியூசிலாந்து சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவி செய்தார்.

பின்னர் பேட் செய்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 3 ரன்களில் பென்னட் பந்தில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் ஆனார்.

11:25 (IST)08 Feb 2020





















இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூஸிலாந்து அணி. 

11:12 (IST)08 Feb 2020





















கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி

49-வது ஓவரில் 260 ரன்களை எடுத்துள்ள நியூஸிலாந்து அணி, இறுதி ஓவரை ஆடிக் கொண்டிருக்கிறது. 

10:57 (IST)08 Feb 2020





















46-வது ஓவர் முடிவு

46-வது ஓவரின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்துள்ளது நியூஸிலாந்து அணி. 

10:38 (IST)08 Feb 2020





















8 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி

42.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்துள்ளது நியூஸிலாந்து அணி. களத்தில் ஜிம்சனும், டெய்லரும் இருக்க இந்திய அணியின் ஷர்துல் தாகூர் பந்து வீசுகிறார். 

10:32 (IST)08 Feb 2020





















திணறும் நியூசிலாந்து, மளமளவென சரிந்த விக்கெட்டுகள்

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஹென்றி நிக்கோலஸ் 41 ரன்களில் வீழ்ந்தாலும், அனுபவ வீரர் மார்டின் குப்தில் நங்கூரம் பாய்ச்சி நின்று இந்திய பவுலர்களை திணறடித்தார். 26 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என வலுவாக இருந்த நியூசிலாந்து, அதன்பிறகு மளமளவென சரிந்தது. டாம் ப்ளண்டல் 22 ரன்களில் ஷர்துல் தாகூர் பந்தில் ஷைனியிடம் கேட்ச் ஆனார். குப்தில் 79 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.நியூசிலாந்து 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் 29 ரன்களுடனும், டிம் சவுதி 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சாஹல் 3, ஷர்துல் 2, ஜடேஜா 1 விக்கெட் என சாய்த்தனர். டிம் சவுதி 3 ரன்களில் சாஹல் பந்தில் ஷைனியிடம் கேட்ச் ஆகிவிட, நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்தது.

10:27 (IST)08 Feb 2020





















தடுமாறும் நியூசிலாந்து அணி..

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 191 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. 

10:15 (IST)08 Feb 2020





















இரு அணிகளுக்கும் முக்கியப் போட்டி

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோர் எடுத்தும், அதை தடுக்க முடியாமல், தோல்வி அடைந்தது. ஆகையால் இரு அணிகளுக்குமே இன்றையப் போட்டி முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

09:13 (IST)08 Feb 2020





















நியூஸிலாந்து அணி விபரம்

மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ராஸ் டெய்லர், சாப்மன், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், கைல் ஜாமிசன், ஹாமிஷ் பென்னட், டிம் சவுதி ஆகியோர் நியூஸிலாந்து அணியில் விளையாடுகிறார்கள். 

08:40 (IST)08 Feb 2020





















இந்திய அணி விபரம்

மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். 

08:15 (IST)08 Feb 2020





















இந்திய அணிக்கு சவால்

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.

07:30 (IST)08 Feb 2020





















டாஸ் வென்ற இந்திய அணி

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.8) ஆக்லாந்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ind vs nz 2nd odi live score card live cricket score updates

Next Story
இந்தியா U19 vs வங்கதேசம் U19 இறுதிப் போட்டி 2020 – போட்டி நேரம், வானிலை, வீரர்கள் விவரம் இங்கேind vs ban u19 world cup final 2020
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express