Advertisment

IND vs NZ : 2-வது டி20 போட்டியையும் மழை பாதிக்குமா… வெதர் ரிப்போர்ட் கூறுவது என்ன?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடக்கும் மவுன்ட் மவுங்கானுயில் நாளை மழை பெய்ய 90% வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
IND vs NZ 2nd T20I, mount maunganui weather updates in tamil

India vs New Zealand 2nd T20I, Weather in Mount Maunganui Tamil News

IND VS NZ 2nd T20 Match 2022:  mount maunganui weather report in tamil: நியூசிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், வெலிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நேற்று பகல் 12 மணிக்கு தொடங்க இருந்த முதலாவது டி20 போட்டி, தொடர் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 'டாஸ்' கூட போடாத நிலையில் போட்டியை ரத்து செய்ததால், இரு அணி வீரர்களும், ரசிகர்களும் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisment

இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி மவுன்ட் மாங்கானுவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு நடக்கிறது.

இந்தியா vs நியூசிலாந்து: வானிலை முன்னறிப்பு

இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நடக்கும் மவுன்ட் மவுங்கானுயில் நாளை மழை பெய்ய 90% வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

publive-image

"நியூசிலாந்தின் மவுன்ட் மவுங்கானுயில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) மழை பெய்ய 90% வாய்ப்பு உள்ளது. 84% ஈரப்பதம் இருக்கும். மணிக்கு 52 கிமீ வேகத்தில் காற்று வீசும். மேக மூட்டம் 84 சதவீதம் இருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பொழிவு 42 சதவீதமாக குறையும்." என்று நியூசிலாந்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எனினும், 'வெலிங்டனைப் போல் அல்லாமல், ரசிகர்களுக்காக போட்டியில் சில ஓவர்கள் வீசப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Vs New Zealand Sports Cricket Indian Cricket Team Hardik Pandya Indian Cricket New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment