Advertisment

டி20 உலக கோப்பை: நியூசிலாந்து முதல் வெற்றி; இந்தியாவுக்கு 2வது படுதோல்வி

T20 World Cup 2021 India vs New Zealand match highlights in tamil: 111 ரன்கள் கொண்ட எளிய இலக்கை 14.3 வது ஓவரிலே எட்டிய நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs NZ live match in tamil: India vs New Zealand Live updates tamil

T20 World Cup 2021, IND vs NZ match highlights in tamil: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், குரூப் -2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று ஞாயிற்று கிழமை துபாயில் பலப்பரீட்சை நடத்தின.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கையில் 1 பவுண்டரியை விரட்டிய தொடக்க வீரர் இஷான் கிஷன் 4 ரன்னுடன் நடையை கட்டினார்.

மறுமுனையில் இருந்த கேஎல் ராகுல் 3 பவுண்டரிகளை விளாசி 18 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். களத்தில் இருந்த கேப்டன் கோலி 9 ரன்னுடனும், 1 சிக்ஸர் 1 பவுண்டரியை பறக்கவிட்டு அதிரடி காட்ட துவங்கிய ரோஹித் சர்மா 14 ரன்களுடனும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். எனவே, ரன் சேர்க்க தடுமாறிய இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

தொடர்ந்து களத்தில் இருந்த ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்டியா ஜோடி சிறிது நேரம் நிதானத்தை கடைப்பிடித்தது. இந்த ஜோடியில் அதிரடி காட்ட முயற்சித்த பண்ட் (12 ரன்கள்) ஆடம் மில்னே 14.3 ஓவரில் போல்ட் - அவுட் ஆகி வெளியேறினார். 24 பந்துகளில் 1 பவுண்டரி மட்டும் அடித்து 23 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த ஜடேஜா (26 ரன்கள்) 1 சிக்ஸர் 2 பவுண்டரி அடித்து ஆறுதல் கொடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை பறி கொடுத்த இந்திய அணி 110 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவரிகளில் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டையும், டிம் சவுத்தி மற்றும் ஆடம் மில்னே தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய நியூசிலாந்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அந்த அணிக்கு வலுவான ரன்களை சேர்த்த தொடக்க வீரர்கள் ஜோடியில் மார்ட்டின் கப்டில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களும், 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் டேரில் மிட்செல் 49 ரன்களும் குவித்தனர். பொறுப்புடன் விளையாடி கேப்டன் வில்லியம்சன் அணியின் வெற்றியை உறுதி செய்தததோடு 3 பவுண்டரிகள் விளாசி 33 ரன்கள் சேர்த்தார்.

இதனால், 111 ரன்கள் கொண்ட எளிய இலக்கை 14.3 வது ஓவரிலே எட்டிய நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இந்த தொடரில் அதன் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணி அதன் 2வது மோசமான தோல்வியை பதிவு செய்திருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:32 (IST) 31 Oct 2021
    இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 14.3 வது ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 35 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார்.



  • 22:32 (IST) 31 Oct 2021
    இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்துக்கு அபார வெற்றி!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 14.3 வது ஓவரிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 35 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சேர்த்தார்



  • 22:20 (IST) 31 Oct 2021
    டேரில் மிட்செல் அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணியில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிரடி காட்டிய தொடக்க வீரர் டேரில் மிட்செல் 39 பந்துகளில் 49 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.



  • 22:18 (IST) 31 Oct 2021
    விக்கெட் சாய்க்க திணறும் இந்தியா; வெற்றியை நோக்கி நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி பவர் 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 94 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி விக்கெட் சாய்க்க திணறி வருவதால் நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது



  • 22:04 (IST) 31 Oct 2021
    வலுவான நிலையில் நியூசிலாந்து; விக்கெட் திணறும் இந்தியா!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி பவர் 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 83 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியின் அசத்தலான ஆட்டத்தை தடுக்க முடியாமலும், விக்கெட் சாய்க்காமலும் திணறி வருகிறது இந்திய அணி.



  • 21:47 (IST) 31 Oct 2021
    பவர் பிளே முடிவில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 44 ரன்களை சேர்த்துள்ளது.



  • 21:44 (IST) 31 Oct 2021
    பவர் பிளே முடிவில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட்டை இழந்து 44 ரன்களை சேர்த்துள்ளது.



  • 21:35 (IST) 31 Oct 2021
    மார்ட்டின் கப்டில் அவுட்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணியில் 3 பவுண்டரிகளை விரட்டிய மார்ட்டின் கப்டில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா வீசிய 3.4 ஓவரில் தாக்கூர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



  • 21:25 (IST) 31 Oct 2021
    களத்தில் நியூசிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 111 ரன்கள் கொண்ட இலக்கை துரத்தி வரும் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் - டேரில் மிட்செல் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.



  • 21:09 (IST) 31 Oct 2021
    பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்துக்கு 111 ரன்கள் இலக்கு!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை சேர்த்துள்ளது. இதனால் பந்துவீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டிய நியூசிலாந்துக்கு 111 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



  • 21:01 (IST) 31 Oct 2021
    ஹர்திக் பாண்டியா அவுட்!

    நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் 1 பவுண்டரியை விரட்டி 24 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா டிரென்ட் போல்ட் வீசிய 18.1 ஓவரில் மார்ட்டின் கப்டில் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 20:58 (IST) 31 Oct 2021
    வலுவான இலக்கை நிர்ணயிக்க திணறும் இந்தியா!

    நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் அந்த அணிக்கு எதிராக வலுவான இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி போராடி வருகிறது



  • 20:45 (IST) 31 Oct 2021
    15 முடிவில் இந்திய அணி!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 15 முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்துள்ளது



  • 20:45 (IST) 31 Oct 2021
    15 முடிவில் இந்திய அணி!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 15 முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை சேர்த்துள்ளது



  • 20:12 (IST) 31 Oct 2021
    ரோஹித் சர்மா அவுட்!

    நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் 1 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசிய ரோஹித் சர்மா 14 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.



  • 20:04 (IST) 31 Oct 2021
    பவர் பிளே முடிவில் இந்திய அணி!

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி பவர் பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை சேர்த்துள்ளது



  • 20:04 (IST) 31 Oct 2021
    ராகுல் அவுட்!

    நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழ்ந்த நிலையில், மறுமுனையில் இருந்த கேஎல் ராகுல் 3 பவுண்டரிகளை ஓடவிட்டு 18 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.



  • 19:48 (IST) 31 Oct 2021
    இஷான் கிஷன் அவுட்!

    நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியுள்ள நிலையில், ஒரு பவுண்டரியை துரத்திய இஷான் கிஷன் டிரென்ட் போல்ட் வீசிய 2.5 ஓவரில் டேரில் மிட்செல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 19:34 (IST) 31 Oct 2021
    ஆட்டம் இனிதே ஆரம்பம்; களத்தில் இந்திய அணி

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி களமிறங்கியுள்ளது.



  • 19:16 (IST) 31 Oct 2021
    இரு அணி சார்பில் களமிறங்கும் வீரர்கள் பட்டியல்

    இந்தியா: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட்



  • 19:13 (IST) 31 Oct 2021
    இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்; டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு!

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றிரவு 7:30 மணிக்கு துபாயில் நடக்கும் லீக் ஆட்டத்தில் குரூப் -2 பிரிவில் இடம்பெற்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

    தற்போது இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டுள்ள நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீசுகிறது. எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும்.



  • 18:47 (IST) 31 Oct 2021
    எழுச்சி பெற்று வெற்றி கணக்கை தொடருமா இந்தியா?

    சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களை உள்ளடக்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. எனவே அந்த அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.



  • 18:07 (IST) 31 Oct 2021
    இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர்!

    இந்தியா – நியூசிலாந்து அணிகள் சர்வதேச அரங்கில் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.



  • 17:46 (IST) 31 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்றிரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் குரூப் -2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.



  • 17:45 (IST) 31 Oct 2021
    இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

    இந்தியா: ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா அல்லது ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் , டெவான் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சீஃபர்ட், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி/ஆடம் மில்னே, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்



  • 17:43 (IST) 31 Oct 2021
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

    7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், இன்றிரவு 7:30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் குரூப் -2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.



India Vs New Zealand Virat Kohli Sports Cricket Indian Cricket Team Live Cricket Score Live Updates Kane Williamson New Zealand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment