Advertisment

Ind vs NZ: போட்டி கைவிடப்பட்டாலும் இந்தியாவுக்கு சாதகமே! நியூஸி., - இந்தியா 'மழைத் தூறல்கள்' ஒரு பார்வை!

World Cup 2019, India vs New Zealand Match Score Updates: இந்தியா vs நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Nz Cricket Match Updates

Ind vs Nz Cricket Match Updates

New Zealand vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை 2019 தொடரில், நேற்று(ஜூன்.13) நாட்டிங்கமின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், போட்டி டாஸ் கூட போடாமல் கைவிடப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.

Advertisment

 

Live Blog

World Cup 2019: India vs New Zealand, IND vs NZ 2019 Updates, Trent Bridge, Nottingham - இந்தியா vs நியூசிலாந்து ஆட்டம் மழையால் ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.



























Highlights

    11:59 (IST)14 Jun 2019

    ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்

    10:46 (IST)14 Jun 2019

    Ind vs NZ - அந்த ஒரு புள்ளி

    நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பது இரு அணிகள் மட்டுமே. இங்கிலாந்து, நியூசிலாந்து. இதில், நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பயிற்சிப் போட்டியில் மிக மோசமாக சரண்டராகி தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, நேற்றைய போட்டியில், இந்தியா சிறப்பாக செயல்படாமல் போயிருந்தால், நாம் ஆட்டத்தை இழந்திருக்க வாய்ப்புள்ளது. ஸோ, மழையால் ஒரு புள்ளி கிடைத்தது என்பது இந்தியாவுக்கு சாதகமே. 

    அதேசமயம், உலகக் கோப்பை தொடரை இந்தியா தொடங்கிய விதம் செம ரகத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளை எந்தவித நெருக்கடியும் இன்றி, இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஸோ, அந்த ஃபார்மை பார்க்கும் பொழுது, நியூஸி.,யும் நேற்று கடும் சவால் சந்தித்து இருக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், இரு அணிகளுக்கும் அந்த ஒரு புள்ளி என்பது நிச்சயம் வேல்யூவானது என்பதில் சந்தேகமேயில்லை.

    19:46 (IST)13 Jun 2019

    IND vs NZ Live Cricket - இந்தியா மூன்றாம் இடம்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

    19:37 (IST)13 Jun 2019

    IND vs NZ Match Live : பகிர்ந்து அளிக்கப்பட்ட புள்ளிகள்

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல், டாஸ் கூட போடப்படாமல் போட்டி கைவிடப்பட்டிருக்கிறது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. 

    19:35 (IST)13 Jun 2019

    Ind vs Nz match Live : ஆட்டம் கைவிடப்பட்டது!

    இறுதியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அம்பயர்கள், நீண்ட ஆலோசனைக்கு பிறகு போட்டி கைவிடப்படுவதாக அறிவித்துள்ளனர். 

    19:17 (IST)13 Jun 2019

    Ind vs Nz Live Online - 4.25 மணிக்கு டி20 போட்டி?

    உலகக் கோப்பை கிரிக்கெட் ட்விட்டர் தளத்தில், "மழை நின்றுவிட்டால், உள்ளூர் நேரப்படி மாலை 4.25 மணிக்கு டி20 ஆட்டமாக நியூசிலாந்து - இந்தியா போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது". இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்கு அம்பயர்கள், கள ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளனர். அதைப் பொறுத்தே, போட்டி நடக்குமா என்பது தெரிய வரும்.

    19:00 (IST)13 Jun 2019

    ind vs nz live cricket match - அடுத்த அப்டேட் 10 நிமிடத்தில்...

    இன்னும் 10 நிமிடத்தில், நடுவர்கள் மீண்டும் கள ஆய்வு நடத்த இருக்கிறார்கள். இன்னும் 2 மணி நேரத்திற்குகுள்ளாக டி20 போட்டியாக நடத்துவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்தாக வேண்டும். 

    ஸோ, ரசிகர்களே... நம்பிக்கையோடு இருங்க!!

    18:44 (IST)13 Jun 2019

    Cricket Live, Ind vs NZ Match Online - ரெய்ன்.. ரெய்ன்... கோ அவே...

    நாட்டிங்காமில் தற்போது மிக கனமழை பெய்து வருகிறது. ரசிகர்கள், தங்கள் குடைகளுக்கு கீழ் ஒளிந்து கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. நடுவர்கள், வீரர்கள் என அனைவரும் பெவிலியனில்... 

    18:30 (IST)13 Jun 2019

    Latest Update Ind vs Nz Match - அடுத்த அப்டேட் எப்போது?

    தற்போது மழை சற்று கனமாகவே பெய்து வருவதால், அம்பயர்களின் அடுத்த கள ஆய்வு எப்போது என்று தெரிவிக்கவில்லை. இருப்பினும், நாம் முன்பே சொன்னது போல், இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால், அதற்கு முதலில் இந்த அடர் மழை வழிவிட வேண்டும்.

    18:14 (IST)13 Jun 2019

    IND vs NZ Live Cricket Match, CWC 2019, Nottingham - தேவுடா!!!!

    இது என்ன அநியாயம்! மீண்டும் மழை... ஆனால், இம்முறை கனமழை. காலையில் இருந்து இப்படியொரு மழையை நாம் டிரென்ட் பிரிட்ஜில் பார்க்கவில்லை. அடர் மேகங்களுடன் மழை கொட்டுகிறது. ஆனால், இங்கிலாந்து நேரப்படி, மாலை 4 மணிக்கு மேல் மழை இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், டி20 போட்டி அல்லது 10 ஓவர் போட்டியை நாம் எதிர்பார்க்கலாம்.

    17:58 (IST)13 Jun 2019

    NZ vs IND Live Score Card : மழை எப்போது முற்றிலும் நிற்கும்?

    டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் கவலை ரேகைகளுடன் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு, வானிலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஹேப்பி நியூஸ் இது. 

    publive-image

    நாட்டிங்காமில், போட்டி நடைபெறும் இடத்தில், இங்கிலாந்து நேரப்படி மாலை 4 மணிக்கு பிறகு மழை நிச்சயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு மேல் மழை இருக்காது. ஸோ, டி20 போட்டியாகவோ, 15 ஓவர் கொண்ட போட்டியாகவோ அல்லது 10 ஓவர் போட்டியாகவோ கூட ஆட்டம் நடைபெற வாய்ப்பிருக்கிறது.

    17:43 (IST)13 Jun 2019

    India vs New Zealand Live Match, Nottingham, Trent Bridge - டி20 ஆட்டமாகிறதா இந்தியா vs நியூஸி., மேட்ச்?

    ஒருவேளை, இந்தியா vs நியூசிலாந்து போட்டி இனி நடக்க வேண்டுமெனில், அது டி20 போட்டியாகயாகத் தான் இருக்க முடியும். மழை முற்றிலும் நின்றுவிட்டால், உள்ளூர் நேரப்படி மாலை 4.15 மணிக்கு இப்போட்டி தொடங்கும். அதாவது, இந்திய நேரப்படி இரவு 8.45 மணிக்கு போட்டி தொடங்கும்.

    ஆக, எப்படியோ இன்னைக்கு செம மேட்ச் காத்திருக்கு!

    17:24 (IST)13 Jun 2019

    India vs New Zealand vs Rain - அடுத்த அப்டேட் எப்போது?

    அம்பயர்கள் லன்ச்சுக்கு சென்று இருக்கிறார்கள். ஆகையால், போட்டி நடைபெறுவது பற்றிய அடுத்த அப்டேட், இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு கள ஆய்வு செய்த பிறகு உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:17 (IST)13 Jun 2019

    Ind vs Nz Live Match - இது கொஞ்சம் தித்திப்பான செய்தியே!

    டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் உள்ள இந்திய ரசிகர்களின் Umbrella Hat கீழே இறங்கியுள்ளது. அப்போ இது நல்ல செய்தி தானே!. யெஸ்.. மழை இப்போது நின்றிருக்கிறது. Super Soppers தங்களது களப்பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. ஆனால், OutField-ல் ஏகப்பட்ட ஈரப்பதமான திட்டுகள் உள்ளன... (சேறும்., சகதியுமா இருக்குன்னு சொல்லுப்பா)... அதே தான். அதை எப்படி சரி செய்வது என்பதில் தான் குழப்பம்.

    இருந்தாலும், நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    17:05 (IST)13 Jun 2019

    New Zealand vs India Live Cricket - வெள்ளாவி வச்சு வெளுத்த நடிகை, இப்போ கிரிக்கெட்டில்

    அதாங்க... நம்ம டாப்சி. 'நா அப்படியே ஷாக் ஆகிட்டேன்-னு' வடிவேலு சொல்ற மாதிரி, கையுல மைக்கோட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்-ல, கிரிக்கெட் சாம்பியன்ஸ்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, நமக்கும் அப்படித் தான் இருந்தது. 

    16:48 (IST)13 Jun 2019

    IND v NZ Live Cricket, World Cup 2019 - அசரடிக்கும் இங்கிலாந்தின் Drainage System

    மீண்டும் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இது உண்மையில், காண்டாகும் செய்தி தான். மன்னிச்சூ... இந்திய நேரப்படி 5 மணிக்கு கள ஆய்வு செய்ய அம்பயர்கள் வருவார்கள் என்றாலும், மழை விட்டால் தானே அவர்கள் உள்ளேயே வர முடியும்? OutField மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும், இங்கிலாந்தை பொறுத்தவரை, அவர்களது Drainage System வேற லெவலில் இருக்கும். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, இவர்களது drainage system அபாரமாக இருக்கும். ஆகையால் விரைவில் தண்ணீரை வடிகட்டி, பிட்சை ரெடி செய்துவிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!.

    16:24 (IST)13 Jun 2019

    New Zealand vs India Rain Updates - கவலை வேண்டாம்; நிச்சயம் இன்னைக்கு மேட்ச் இருக்கு

    நாட்டிங்கம் டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில் நமக்கு இருக்கும் ஒரே பாஸிட்டிவ் விஷயம் என்னவெனில், மழை விட்டு விட்டு பெய்வது. Covers மூடியாக இருந்தாலும், அவ்வப்போது க்ளீயர் ஆகிறது. கொஞ்சம் வருண பகவான் கருணை காட்டினால் போதும்... 15 ஓவர் போட்டியாக கூட நடத்த முடியும்!!

    16:16 (IST)13 Jun 2019

    Nz vs Ind Live Cricket Score - அடுத்த அப்டேட் எப்போது?

    மழை நின்றுவிட்டாலும், மைதானத்தை க்ளியீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த கள ஆய்வு மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16:10 (IST)13 Jun 2019

    Ind vs NZ, CWC 2019 : மழை நின்றது; பணிகள் தீவிரம்

    கிட்டத்தட்ட அரைமணி நேரமாக பெய்த மழை, இப்போது சுத்தமாக ஓய்ந்திருக்கிறது. Super Soppers கொண்டு களத்தை சரி செய்யும் பணி அதிவேகமாக நடந்து வருகிறது.

    16:01 (IST)13 Jun 2019

    India vs New Zealand Live, CWC 2019 : டி20 போட்டியாக நடக்க வாய்ப்பா?

    மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்வதால், கள நடுவர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 7 மணி போட்டி நடைபெறவில்லை என்றாலும் கூட, அதற்கு பிறகு மைதானம் ரெடியாகிவிட்டது எனில், டி20 போட்டியாக நடத்த வாய்ப்புள்ளது.

    15:53 (IST)13 Jun 2019

    Cricket World Cup 2019 - இதுக்கு ஒரு எண்டே கிடையாதா?

    உலகக் கோப்பை மாதிரியான மிக முக்கியமான கிரிக்கெட் தொடரில், பிளானிங் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை இங்கே நாம் கண்கூடாக பார்க்கிறோம். இங்கிலாந்தின் மழைக் காலத்தில் உலகக் கோப்பையை நடத்தினால், யாருக்கு என்ன பலன்?

    15:42 (IST)13 Jun 2019

    NZ v IND Live Score : மைதானத்தில் கடும் மழை

    இந்த சோக செய்தியை எப்படிச் சொல்வேன்.... டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மழை இப்போது வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. பணியாட்கள், மைதானத்தை கவர் செய்திருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து அடர் மேகமூட்டம் இருப்பதால், இந்த மழை நின்றாலும், மீண்டும் மழை பொழிய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

    15:30 (IST)13 Jun 2019

    NZ vs IND World Cup Match Live : ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மேட்ச் இது.. ஏன்?

    ஏன்னா... வார்ம் அப் மேட்சுல, இதே நியூசிலாந்திடம் தான் இந்தியா தர்ம அடி வாங்கியது. அதற்கு வட்டியும், முதலுமாக திருப்பித் தர வேண்டாமா??? ஆனா, இந்த பாழா போன மழை, 'குறுக்க இந்த கௌசிக்வந்தா'-னு சொல்லி நம்மள டார்ச்சர் பண்ணுது.

    15:23 (IST)13 Jun 2019

    India vs New Zealand Live : கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரசிகர்களே!

    லேசாக தூறிக் கொண்டிருந்த தூறலும் நின்றுப் போனதால், அடுத்த கள ஆய்வு அப்டேட் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

    15:10 (IST)13 Jun 2019

    Ind vs Nz Live Updates - அடுத்த அப்டேட் எப்போது?

    போட்டி நடைபெறும் நாட்டிங்கம் மைதானத்தில் மீண்டும் மழை தூர ஆரம்பித்து இருக்கிறது. இதனால், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் கள ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:34 (IST)13 Jun 2019

    IND vs NZ Live - டாஸ் தாமதம்

    வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்தின் டாஸ் தாமதமாகியுள்ளது. இந்திய நேரப்படி, பிற்பகல் 3 மணிக்கு டாஸ் குறித்து அடுத்த அப்டேட் கிடைக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    IND vs NZ Cricket Score: முன்னதாக, நேற்று(ஜூன்.12) நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோதின. ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 308 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

    ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே ஆல் அவுட்டாகியது. தற்போது, 3வது முறையாக பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் ஆல் அவுட்டாகி இருக்கிறது

    World Cup
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment