Advertisment

இந்தியா vs பாகிஸ்தான்: செம்ம ஃபைட் இந்த வீரர்களுக்கு இடையேதான்!

players to watch out in India vs Pakistan T20 World cup contest Tamil News: டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள பாபர் ஆஸம், விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களும், உள்ளூர் ஆட்டங்களில் கவனம் ஈர்த்த இஷான் கிஷன், ஹைதர் அலி போன்ற இளம் வீரர்களும் தங்களது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Ind vs pak T20 World cup Tamil News: 5 players to watch out in India vs Pakistan contest

Ind vs pak T20 World cup Tamil News: 7வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ‘சூப்பர்-12’ சுற்று போட்டிகள் வரும் 24ம் தேதி ஞாயிற்று கிழமை முதல் தொடங்க உள்ள நிலையில் முதல் லீக் போட்டியிலே, கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மாலை 7:30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறுகிறது.

Advertisment

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள்…

எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு எந்த வித நேரடி கிரிக்கெட் போட்டிக்கும் வாய்ப்பில்லை என்று பிசிசிஐ மறுத்து வருகிறது. இதனால் ஐ.சி.சி. நடத்தும் பெரிய போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை ருசித்தது.

publive-image

உலகக் கோப்பை தொடர் வரலாற்றை பொறுத்தவரை இந்திய அணியை பாகிஸ்தான் அணி இதுவரை வீழ்த்தியதே இல்லை. ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியுடன் இதுவரை 7 முறை மோதிய பாகிஸ்தான்அணி 7 முறையுமே தோல்வியைத்தான் கண்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் 5 முறை எதிர்கொண்டு அதில் 4 முறை தோல்வியுடன் நடையைக் கட்டியது பாகிஸ்தான். ஒரு போட்டிக்கு மட்டும் முடிவு கிடைக்கவில்லை. எனினும், ஐசிசி நடத்திய சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் மட்டும் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்.

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாகிஸ்தான்?

publive-image

உலகக் கோப்பை போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணி இம்முறை இந்திய அணியை வீழ்த்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் இந்த போட்டி குறித்து பேசுகையில், "இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த போட்டி இறுதிப் போட்டிக்கு முன்பாக நடக்கும் இறுதிப் போட்டியாக இருக்கும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணியினிடம் இருந்து 50 சதவிகிதம் அழுத்தம் குறைந்து விடும்" என்று கூறியுள்ளார். தவிர, இந்திய அணியை உலகக் கோப்பையில் வீழ்த்தினால் பலவிதமான பரிசுகள் வழங்கப்படும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவி்ப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளில் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள்:

இந்தியா - பாகிஸ்தான் அணிகளில் கவனிக்கத்தக்க வீரர்களாக வலம் வரும் 5 வீரர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வரும் விராட் கோலி ஐசிசி நடத்திய போட்டிகளில் இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. நடப்பு டி-20 உலககோப்பையுடன் அவர் தனது கேப்டன் பதவியை துறக்கவுள்ள நிலையில், அவரை விமர்சனம் செய்பவர்கள் முகத்தில் கரியை பூச இதைவிட நல்ல சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்காது.

publive-image

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள கேப்டன் கோலி, 2012-2016ம் ஆண்டு வரை அந்த அணிக்கு எதிராக 6 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றில் 254 ரன்கள் குவித்துள்ள அவர் 84.66 சராசரியுடன் உள்ளார். மேலும், 118.69 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்,

பாபர் ஆஸம்

publive-image

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்தி வரும் பாபர் ஆஸம் கடந்த காலங்களில் டி20 கிரிக்கெட்டில் ஈர்க்கக்கூடிய வகையிலே செயல்பட்டு உள்ளர் என்றால் நிச்சயம் மிகையாகாது. தற்போது டி20 கிரிக்கெட் தரவரிசையில் 2வது இடம் பிடித்துள்ள அவர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்றும், தனது அதிரடி ஆட்டத்தால் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என்றும் யூகிக்கப்படுகிறது. மேலும், டி20 கிரிக்கெட்டில் 2,204 ரன்களை குவித்துள்ள அவர் 46.89 சராசரியுடன் உள்ளார்

ரோகித் ஷர்மா

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக வலம் வரும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக வழக்கம் போல் தனது ரன் வேட்டையை தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். அந்த அணிக்கு எதிராக இதுவரை 16 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 720 ரன்கள் சேர்த்துள்ளார். 2 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களுடன் 51.42 சராசரியுடன் உள்ளார்.

publive-image

கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது மான்செஸ்டரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 140 ரன்கள் சேர்த்திருந்தார் ரோகித். மேலும் இதே உலகக் கோப்பை தொடரில் 8 ஆட்டங்களில் 5 சதங்களை விளாசி, ஒரு உலகக் கோப்பையில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

ஃபகார் சமான்

publive-image

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக உள்ள ஃபகார் சமான் டி-20 போட்டிகளில் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும், கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி இருந்தார். இந்த போட்டியில் 114 ரன்கள் குவித்த அவர் அந்த அணியின் ஸ்கோர் 338 ஆக உயர அடித்தளமிட்டர். எனவே, இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் அதே உத்வேகத்துடன் களமிறங்குவார்.

ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணிக்காக 3 வகையான போட்டிகளிலும் களமிறங்கி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். மிகத்துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அவர் டெத் ஓவர்களில் பந்துவீசுவதிலும், ரன்களை கட்டுப்படுத்துவதிலும், மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் முக்கிய பங்குக்கிறார். இதுவரை 49 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ள அவர் 59 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

publive-image

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தவில்லை என்றாலும், அவ்வப்போது தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை சாய்த்து இருந்தார். இதே பார்மை நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் அவர் தொடர்வார் என்று நம்பலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Rohit Sharma Cricket Indian Cricket Team T20 Worldcup India Vs Pakistan Babar Azam Captain Virat Kholi Jasprit Bumrah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment