Advertisment

IND vs SA 2nd Test Day 1 Highlights : மாயங்க் அகர்வால் சதம் - வலுவான பேஸ்மென்ட் அமைத்த இந்தியா

Ind vs Sa 2nd test day 1 Highlights : இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது டெஸ்ட்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs SA 2nd Test Day 1

IND vs SA 2nd Test Day 1

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisment

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றிப் பெற்றது. அப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் ரோஹித் சதம் விளாசி அசத்தினார். இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்திய அணியில் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs SA 2nd Test Day 1 Highlights

இந்தியா பிளேயிங் XI: ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, அஜின்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.

தொடக்கத்தில் ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ரபாடா ஓவரில் வெளியேற, மாயங் அகர்வாலும், புஜாராவும் அபாரமான பார்ட்னர்ஷிபை வெளிப்படுத்தினர். முதல் டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசிய மாயங்க் அகர்வால், இப்போட்டியிலும் சதம் விளாசி அசத்தினார்.

195 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து, ரபாடா பந்துவீச்சில் மாயங்க் கேட்ச் ஆனார். புஜாரா 58 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அரைசதம் அடிக்க, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.

கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் நீங்கள் காணலாம்.

Ind Vs Sa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment