Advertisment

IND vs SL: ரோகித் அதிரடி வீண்; இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி  

India vs Sri Lanka, Super Four, Match 3 (A1 v B1) score updates Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில், துபாயில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs SL, Asia cup super 4 - live score updates in tamil

IND vs SL Asia Cup Live score online India are facing Sri Lanka in Asia Cup today Tamil News

India vs Sri Lanka (IND vs SL), Asia cup Online score updates in tamil: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரக மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இத்தொடருக்கான  சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், துபாயில் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

Advertisment

நடப்பு ஆசிய தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் முன்னேறி இருக்கின்றன. இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த சூப்பர்4 சுற்றில் இந்தியா அதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போராடி தோல்வி அடைந்தது. இதில் இந்திய அணி 181 ரன்கள் குவித்த போதிலும் பாகிஸ்தான் ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்து வெற்றியை ருசித்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து விதமாக உள்ளது. இதனால், இந்திய அணி எஞ்சிய இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இனி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியா - இலங்கை அணிகள் மோதல்

நடப்பு சாம்பியனான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பரம போட்டியாளரான பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. எனினும், அந்த ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். தொடக்க ஜோடியான கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லோகேஷ் ராகுலும் ஓரளவு நன்றாக விளையாடினர். ஆனால், அவர்களிடமிருந்து அதிக ஃபயர் பவரை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

இந்திய அணியின் மிடில் ஆடரில் சூரியகுமார் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் அவரின் பேட்டில் இருந்து ரன்கள் அதிகம் வந்து சேரவில்லை. பண்ட் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பை வழங்கப்படும் என தெரிகிறது. யுஸ்வேந்திர சாஹலின் சுழல் ஜாலம் பெரிதாக எடுபடவில்லை. தொடரில் அவர் ஆடிய 3 ஆட்டங்களில் இருந்து அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். எனவே, இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது. 

முன்னதாக நடந்து முடிந்த லீக் சுற்றில் தட்டுத்தடுமாறிய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் அதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பதிலடி கொடுத்தது. எனவே இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் அந்த அணி களமிறங்கும். அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஷனகா, குசல் மென்டிஸ், பானுகா ராஜபக்சே, பந்து வீச்சில் ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்‌ஷனா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

நேருக்கு நேர்

இந்தியா - இலங்கை அணிகள் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. 

ஆடுகளம் எப்படி?

துபாய் மைதானத்தை பொறுத்தவரை, இங்கு  2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால் திறமையை காட்டிலும் 'டாஸ்' தான்முக்கிய பங்கு வகிக்கிறது.

நேரடி ஒளிபரப்பு

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இந்தியா vs இலங்கை: இரு அணிகள் வீரர்கள் பட்டியல்

இந்திய அணி:

கே.எல்.ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல் , அவேஷ் கான்

இலங்கை அணி:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக( கேப்டன்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, தினேஷ் சண்டிமால், தினேஷ் சண்டிமால், எஸ். ஜெப்ரி வான்டர்சே, அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, நுவனிது பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், நுவன் துஷார, மதீஷ பத்திரன

இந்தியா vs இலங்கை: இரு அணிகள் சார்பில் களமாடும் வீரர்கள் பட்டியல் 

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல். 

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, ஹசரங்கா, சமிரா கருணாரத்னே, தீக்‌ஷனா, அசிதா பெர்னாண்டோ, மதுஷனகா. 

டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் ராகுல் களமிறங்கினர். ராகுல் 7 ரன்களில் தீக்‌ஷனா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கோலி மதுஷனகா பந்தில் போல்டானார். அடுத்து ரோகித் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபுறம் ரோகித் அதிரடியாக ஆட, மறுபுறம் சூர்யகுமாரும் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

சிறப்பாக ஆடிய ரோகித் அரைசதம் அடித்து அசத்தினார். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருந்த நிலையில், ரோகித் அவுட் ஆனார். 41 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த ரோகித், கருணரத்னே பந்தில் நிஷங்காவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் 34 ரன்களில் அவுட் ஆனார். ஷனாகா பந்தில் தீக்‌ஷனாவிடம் கேட்ச் கொடுத்து சூர்யகுமார் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பண்ட் 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் டக் அவுட் ஆனார். மறுமுனையில் சற்று சிறப்பாக ஆடிய அஸ்வின் கடைசி நேரத்தில் 15 ரன்கள் சேர்த்தார். இத்துடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் மதுஷனகா 3 விக்கெட்களையும், கருணரத்னே மற்றும் ஷனகா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இலங்கை பேட்டிங்

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் இவர்கள் இருவரும் அற்புறமாக விளையாடி ரன் குவித்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.

நிஷங்கா அரை சதம் அடித்து அசத்தினார். இலங்கை அணி 97 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிஷங்கா, சஹல் பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அசலங்கா டக் அவுட் ஆனார். சஹல் பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து அசலங்கா வெளியேறினார். சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் அரை சதம் அடித்தார்.

அடுத்து வந்த குணதிலகா தடுமாற்றத்துடன் விளையாடி 1 ரன்னில் அவுட் ஆனார். அஸ்வின் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து குணதிலகா வெளியேறினார். அடுத்து 2 பந்துகளிலே மெண்டிஸ் அவுட் ஆனார். இலங்கை அணி நல்ல நிலையில் இருந்த நிலையில், அடுத்தடுத்து 4 விக்கெட்கள் இழந்ததால் சற்று தடுமாறியது.

அடுத்து ஜோடி சேர்ந்த ராஜபக்சே மற்றும் ஷனகா சிறப்பாக விளையாடினர். இருவரும் அணியை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் 19 ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஷனகா 2 பவுண்டரிகள் அடித்தார். இலங்கை பேட்ஸ்மன்கள் 2 ஒயிடுகளுடன் அந்த ஓவரில் 14 ரன்கள் எடுத்தனர்.

இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். கடைசி ஓவர் ப்ரஷ்ருடன் இரு அணிகளும் விளையாடி நிலையில், இலங்கை முதல் நான்கு பந்தில் 5 ரன்கள் அடித்தது. கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பைஸில் 2 ரன்கள் கிடைத்ததால் இலங்கை அணி எளிதாக வென்றது.

ராஜபக்சே 17 பந்துகளில் 25 ரன்களுடனும், ஷனகா 18 பந்துகளில் 33 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்களையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இந்தப்போட்டியில் இலங்கை வென்றதன் மூலம், ஆசிய கோப்பை டி 20 போட்டிகளில் இலங்கையை இந்தியா வென்றதில்லை என்ற சோக வரலாறு தொடர்கிறது.

அதேநேரம், சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த 2 தோல்விகளால், இந்திய அணியின் இறுதிப்போட்டி தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team India Vs Srilanka Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment