Advertisment

கேதர் ஜாதவ் மீது இன்னும் நம்பிக்கை இருக்கா? - வெ.இ., தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 அணி அறிவிப்பு

டெஸ்ட் தொடரில் தொடையை தட்டி விக்கெட் படையலிட்டு வரும் முகமது ஷமி மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றிருக்கிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs wi odi t20 indian team announced bcci

ind vs wi odi t20 indian team announced bcci

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி இன்று(நவ.21) அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

வங்கதேசத்துக்கான எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்து வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் டிசம்பர் 6-ம் தேதியும், 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் 8-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி ஐதராபாத்தில் 11-ம் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் டிசம்பர் 15-ம் தேதியும், 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் 18-ம் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் 22-ம் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கொல்கத்தாவில் கூடி இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

அதன்படி இந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய டி20 அணியில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கேதார் ஜாதவ் ஏன்?

இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே வித்தியாசம் டி20 அணியில் கேதர் ஜாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருப்பது மட்டுமே.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கேதர் ஜாதவ் பேட்டிங் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடியாகவும் விளையாட முடியாமல், நிலைத்து நின்றும் அடிக்க முடியாமல் அவர் தடுமாறியது ஏகத்துக்கும் விமர்சிக்கப்பட்டது. தவிர, அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொண்டும் விளையாடாமல் முடியாமல் போகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஸ்பெஷல் வீடியோ

ரன்னிங், ஃபீல்டிங் போன்றவற்றிலும் அவ்வளவு நேர்த்தியான வீரர் கிடையாது. அவரது ஒரே பலம், ஸ்பின்னில் சப்போர்ட் செய்வது மட்டுமே. பேட்டிங்கில் 25 ரன் + 1 விக்கெட் என்பதே அவரது ரேஷியோ. ஆனால், அதற்காக மட்டுமா தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது புதிராகவே உள்ளது.

ஷமி, புவனேஷ் கம்பேக்

அதேசமயம், டெஸ்ட் தொடரில் தொடையை தட்டி விக்கெட் படையலிட்டு வரும் முகமது ஷமி மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றிருக்கிறார். புவனேஷ் குமாருக்கும் மீண்டும் இடம் கிடைக்க, ஷமி, புவனேஷ், சாஹர் என இந்திய பவுலிங் லைன் அப் பலமாகவே உள்ளது.

தோனி எங்கே?

அதேபோல், மீண்டும் தோனியின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. நீண்ட காலமாக வலைப்பயிற்சியில் கூட ஈடுபடாத தோனிக்கு வாய்ப்பளிக்க வாய்ப்பில்லை என்பது லாஜிக் தான் என்றாலும், ரசிகர்களின் கண்கள் லிஸ்டில் தோனியின் பெயரை நோக்கி அலை பாய்ந்ததை மறுக்க முடியாது.

Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment