India vs Zimbabwe, 3rd ODI Cricket Score Streaming Online: ஜிம்பாப்வே மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில், இந்தியா- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. பிற்பகல் 12: 45 மணிக்கு தொடங்கிய டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கே.எல் ராகுல் 30 ரன்களில் போல்ட் அவுட் ஆனார். அடுத்த சில ஓவர்களிலேயே தவான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு கில்லுடன் இஷன் கிஷான் ஜோடி சேர்ந்தார். மிகசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணிக்கு 140 ரன்கள் குவித்து கொடுத்தது. இதில் சிறப்பாக அரைசதம் அடித்த இஷன் கிஷான் 50(61) ரன்களில் ரன் – அவுட் ஆனார். பின்னர் வந்த தீபக் ஹூடா 1(3) வந்த வேகத்திலேயே பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினார். அதன் பின்னர் சாம்சன் களம் இறங்கினார்.
இதற்கிடையில், அதிரடியாக ஆடிய சுப்மன் கில் இந்திய அணிக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் சுப்மன் கில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது.
Innings Break!
— BCCI (@BCCI) August 22, 2022
A brilliant 130 from @ShubmanGill as #TeamIndia post a total of 289/8 on the board.
Scorecard – https://t.co/ZwXNOvRwhA #ZIMvIND pic.twitter.com/sKPx9NzWwi
A brilliant CENTURY for @ShubmanGill 👏👏
— BCCI (@BCCI) August 22, 2022
His maiden 💯 in international cricket.
Well played, Shubman 💪💪#ZIMvIND pic.twitter.com/98WG22gpxV
தொடர்ந்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், தொடக்க வீரரான கைடனோ 13 ரன்களிலும், கையா 6 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்து அரைசததத்தை நெருங்கிய சீன் வில்லியம்ஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த முன்யொங்கா 15 ரன்களில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சிக்கந்தர் ராசா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டார். இவரின் அதிரடியாக ஆட்டம் ஜிம்பாப்வே அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது.
ஆனால் மறுபுறம், கேப்டன் ஜகுபுவா 16 ரன்களிலும் ரியான்புரில் 8 ரன்களிலும் ஜாங்வி 14 ரன்களிலும் சிறிது நேரம் தாக்குபிடித்த பிரெட் எவன்ஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், சதமடித்து அசத்திய சிக்கந்தர் ராசா 95 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 115 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக வெளியேறினார்.
இறுதியில் 49.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 276 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், குல்தீவ் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தாகூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
இந்திய அணி:
ஷிகர் தவான், கேஎல் ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ராகுல் திரிபாதி, அவேஷ் கான், தீபக் சாஹர் , ருதுராஜ் கெய்க்வாட், ஷாபாஸ் அகமது
ஜிம்பாப்வே அணி:
தகுத்ஸ்வானாஷே கைடானோ, இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, ரெஜிஸ் சகப்வா(விக்கெட் / கீப்பர்), சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நயவுச்சி, தனகா சிவாங்கா, டொனால்ட் ம்ஹூம்பானோ, ரிச்சார் எம்ஹூம்பானோ, டோனி முனியோங்கா, தடிவானாஷே மருமணி, கிளைவ் மடாண்டே, ஜான் மசாரா
இரு அணிகளில் பிளேயிங் லெவன் பட்டியல் பின்வருமாறு:
ஜிம்பாப்வே அணி:
தகுத்ஸ்வானாஷே கைடானோ, இன்னசென்ட் கையா, டோனி முன்யோங்கா, ரெஜிஸ் சகப்வா (விக்கெட் / கீப்பர்), சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ், ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி, ரிச்சர்ட் நகரவா
இந்தியா:
ஷிகர் தவான், கேஎல் ராகுல் (கேப்டன் ), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், அவேஷ் கான்
India in Zimbabwe, 3 ODI Series, 2022Harare Sports Club, Harare 07 February 2023
Zimbabwe 276 (49.3)
India 289/8 (50.0)
Match Ended ( Day – 3rd ODI ) India beat Zimbabwe by 13 runs
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil