Advertisment

விராட்கோலி இல்லாத இந்திய அணி : வெற்றிக்கான வியூகம் அமைப்பாரா ரஹானே?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்குகிறது. விராட்கோலி இல்லாத நிலையில்,இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக உள்ளார்.

author-image
WebDesk
New Update
அஜின்க்யா ரகானே சதம் : 2ம் நாள் முடிவில் இந்தியா 82 ரன் முன்னிலை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Advertisment

இந்த தொடரில், அடிலெய்டில் பகல் இரவு போட்டியாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 244 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 191 ரன்களும் எடுத்தது. தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வெறும் 36 ரன்களில் சுருண்டது. இதில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்கை தாண்டவில்லை. இதனால் 90 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், முதல் போட்டியில் செய்த தவறை திருத்திக்கொண்டு, இரண்டாவது போட்டியில் இந்திய அணி திறமையை நிரூபிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை கடந்த போட்டியில் கேப்டன் விராட்கோலி மட்டுமே முதல் இன்னிங்சில் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் முதல் இன்னிங்சில் ரன் குவிக்கவில்லை என்றாலும் இந்திய வீரர்கள் அதிகபந்துகளை சந்தித்து தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் 2-வது இன்னிங்சில் அது தலைகீழாக மாறியது.

இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், கேப்டன் விராட்கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியுள்ளார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த  முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷமி தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், கேப்டன் கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமக்கப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்வி ஷா, விக்கெட் கீப்பர் விருத்திமான சஹா இருவரும் நாளைய போட்டியில் விளையாடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக பயிற்சிப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் மற்றும் சுப்மான் கில் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. பந்துவீச்சை பொறுத்தவை கடந்த போட்டியில் ஷமி பும்ரா, உமேஷ் வேகமும், அஸ்வின் சுழலும் இந்திய அணிக்கு கொடுத்த்து.ஆனால் காயம்காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து ஷமி விலகியதால், அவருக்கு பதிலான முகமது சிராஜ் அறிமுக வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தவிர மற்ற வீரர்கள் வழக்கம்போல் விளையாடுவார்ர்கள் என எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளது. முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பின்னடைவை சந்தித்தாலும்,2-வது இன்னிங்சில் அசத்தலாக பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியை 36 ரன்களில் சுருட்டி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினர். இதில் ஒருநாள் தொடரில் காயமடைந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் வார்னர் இந்த போட்டியிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக களமிங்கிய பர்னர்ஸ் முதல் இன்னிங்சில் விட்டாலும் 2-வது இன்னிங்சில் அரைசதம் கடந்து தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஆனால் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் 2-வது டெஸ்ட் போட்டியல் ஸ்மித் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.  முதல் போட்டியில் கேப்டன் டிம் பெய்ன் மற்றும் லபுசெஸன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இதனை கருத்தில் கொண்டு மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்டர்க், கம்மின்ஸ், ஹாசில்வுட் ஆகியோர் பலம் சேர்கின்றனர்.

இந்த போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதாகத்தில் இந்திய அணி இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 3 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் டிராவும் 8 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதில் கடந்த 1977-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி தரப்பில் 3 சதங்கள் பதிவு செய்யப்பட்ட்டுள்ளது. இதில் சேவாக்195 ரன்களும், விராட்கோலி, 169 ரன்களும், ரஹானே 147 ரன்களும் எடுத்துள்ளனர். மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
India Vs Australia Boxing Day Test
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment