Advertisment

கவலை தரும் டாப் ஆர்டர் பேட்டிங்: இந்தியா வியூகம் மாறுகிறதா?

Asia Cup 2022: India vs Pakistan super 4 match strategy Tamil News: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆடரில் உள்ள வீரர்கள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

author-image
Martin Jeyaraj
New Update
India changing top-order batting strategy against pak in super 4 match Asia Cup 2022

IND VS PAK on 4th September and Asia Cup 2022 Super 4 Tamil News

Asia Cup 2022 Super 4:  India vs Pakistan Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஏ, பி என இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் அட்டவணையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

Advertisment

இந்நிலையில், இன்று முதல் தொடங்கும் சூப்பர் 4 சுற்றில், அதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் சார்ஜாவில் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை துபாயில் நடக்கிறது.

கடந்த ஞாயிற்று கிழமை நடந்த லீக் ஆட்டத்தைப் போல் இந்த ஆட்டமும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக மாறியுள்ளது. ஏனென்றால், டி-20 உலக கோப்பையில் ஒருமுறை கூட பாகிஸ்தானிடம் தோல்வி காணாத இந்தியா கடைசியாக நடந்த டி-20 உலக கோப்பையில் முதல் முறையாக தோல்வி கண்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடப்பு ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த நிலையில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மீண்டும் ஒருமுறை பலப்பரீட்சை நடத்துவதற்கான சூழல் அமைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 10 வருடங்களாக இவ்விரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடாமல் இருந்து வரும் நிலையில், இந்த தொடரில் இரண்டு அணிகளும் மீண்டும் ஒருமுறை மோதுவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதுஒருபுறமிருக்க, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆடரில் உள்ள வீரர்கள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ராகுல் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டி இருந்தார். இதேபோல், ஒரு சிக்ஸர் அடித்த உடன் குஷியான கேப்டன் ரோகித் அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸர் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரின் அந்த செயல், சேசிங் செய்யும் அணியின் கேப்டன் ஆடும் அழகு இதுதானா? என்று கேள்வியெழுப்ப இடமளித்தது.

ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டிய முன்னாள் கேப்டன் கோலி 35 ரன்கள் எடுத்து ஆறுதல் மட்டுமே கொடுத்தார். ஜடேஜா வழக்கம் போல் கேமியோ ரோல் ப்ளே செய்து விட்டு நடையைக் கட்டினார். தற்போது முழங்கால் காயம் காரணமாக அவரும் தொடரில் இருந்து முழுவதுமாக விலகி இருக்கிறார். அவருக்கு பதில் ஆல்-ரவுண்டர் வீரர் அக்சர் படேல் அணியில் இணைந்துள்ளார்.

இப்படியாக, இந்திய டாப் ஆடரில் ஒரு குழப்பம் நிலவி வரும் நிலையில், அதைப் போக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை போல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் இணைந்து, மீண்டும் ஒரு வித்தியாசமான கலவையை முயற்சிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏன்னென்றால், இந்திய பேட்டிங் வரிசையில் உள்ள 6 வீரர்களில் ஒருவர் கூட இடது கை பேட்ஸ்மேன் கிடையாது. இதனால், அனுபவ இளம் வீரரான பண்ட்க்கு அந்த இடத்தில் களமாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் தாக்குதலுக்கு எதிராக விராட் கோலியோ அல்லது கேப்டன் ரோகித்தோ சௌகரியமாகத் தோன்றவில்லை. மேலும் ஆடுகளம் மெதுவாக இருப்பதால் அவர்களது பிரச்சனைகள் அதிகரித்ததாகத் தான் தோன்றுகிறது. சூர்யகுமார் யாதவின் அதீத புத்திசாலித்தனமான ஆட்டம் ஹாங்காங்கிற்கு எதிராக ஒரு சங்கடமான பேட்டிங் காட்சியாக மாறியதில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது,

இந்த இரண்டு ஆட்டங்களிலும் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தனது மெதுவான பேட்டிங் திறனையே வெளிப்படுத்தி இருந்தார். அவரது மிக மெதுவாக ஆட்டம் அணிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கிறது. ராகுல், ரோகித் மற்றும் கோலியின் சேர்க்கை அணிக்கு நன்றாக வேலை செய்யவில்லை என்பது இப்போது தெளிவாகத் தெரிந்ததால், இந்தியா அதன் டாப் ஆர்டரை மாற்றி, சில ஃபயர்பவரை சேர்க்குமா என்பது இப்போது ஒரு பொருத்தமான கேள்வியாக உதித்துள்ளது.

அணி நிர்வாகம் ராகுலிடம் நியாயம் காட்ட அவருக்கு இன்னும் ஒரு முறை டாப் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால், ராகுலின் தரம் மற்றும் தாக்கத்தை விட ரன்களின் அளவைப் பார்க்கும் தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அணி நிவர்க்கம் அவரிடம் தெளிவாகக் கூற வேண்டும்.

மறுபுறம், பாகிஸ்தான் அணியும் முதல் 10 ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்க விரும்புகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஜோடி சேசிங் செய்யும் ஆட்டத்தில் மட்டும் அதிக வெற்றிகளை பதிவு செய்கின்றனர். ஆனால் முதலில் பேட்டிங் செய்வது இந்த ஜோடிக்கு சுத்தமாக சூட் ஆகவில்லை. மேலும் துபாய் டிராக்கின் மெதுவானது பேட்டர்களுக்கு சில பிரச்சனைகளை உருவாக்குகிறது. எனவே, இவர்களுக்கு குடைச்சல் கொடுக்க இந்திய அணியில் ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் ஆடும் லெவனியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

அக்சரின் கட்டுப்பாடான பந்துவீச்சு ஒரு விருப்பமாக இருந்தாலும், பேட்டிங் ஆல்-ரவுண்டராக தீபக் ஹூடா அல்லது பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ரவிச்சந்திரன் அஷ்வினை முயற்சி செய்யலாம். ஃபக்கர் ஜமான் மற்றும் குஷ்தில் ஷா ஆகிய இரு இடது கை வீரர்கள் டாப் ஆடரில் உள்ளதால், ஒரு ஆஃப் ஸ்பின்னர் அணியில் இருப்பது, புவனேஷ்வர் மற்றும் ஹர்திக் ஆகியோர் பந்துவீச்சு தாக்குதல் தொடுக்கவும், விக்கெட் வீழ்த்தவும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

மொத்தத்தில், சமபலம் பொருந்திய இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும், மற்றொரு "சூப்பர் சண்டே" உறுதி.

இந்தியா vs பாகிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்

பாகிஸ்தான்:

பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், முகமது ஹஸ்னைன், ஹசன் ஏ ஹலீன்

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports Babar Azam India Vs Pakistan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment