Advertisment

உலக தடகள சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டியில் 7வது இடம்! ஒலிம்பிக்ஸை உறுதி செய்த இந்தியா

இந்தியாவால் இந்த சரிவில் இருந்து மீள முடியவில்லை, கடைசி லெக்கில் பிரேசில் தடகள வீரரை நிர்மல் முந்திக்கொண்டு இந்தியாவுக்கு 7 வது இடத்தைப் பிடித்தார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India mixed relay team finishes 7th at Worlds Athletics championship final - உலக தடகள சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டியில் 7வது இடம்! ஒலிம்பிக்ஸை உறுதி செய்த இந்தியா

India mixed relay team finishes 7th at Worlds Athletics championship final - உலக தடகள சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டியில் 7வது இடம்! ஒலிம்பிக்ஸை உறுதி செய்த இந்தியா

முஹம்மது அனஸ், வி.கே. விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ மற்றும் நிர்மல் நோவா டாம் ஆகியோர் அடங்கிய இந்திய கலப்பு தொடர் ஓட்ட 4 * 400 ரிலே அணி உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 7 வது இடத்தைப் பிடித்தது.

Advertisment

3: 09.34 என்ற புதிய உலக சாதனையுடன் அமெரிக்கா தங்கப்பதக்கம் வென்றது. ஜமைக்கா இரண்டாவது இடத்தையும், பஹ்ரைன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. போலந்து, கிரேட் பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் ஆகியவை இந்தியாவை முந்தின.

இந்தியா - மற்ற அணிகளைப் போலவே - ஆங்கர் லெக் மற்றும் பைனல் லெக்கில் ஆணுடன் செல்ல, இரண்டு பெண்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது லெக்கில் ஓடினார்கள். இந்த முறையை பின்பற்றாத ஒரே அணி போலந்து மட்டுமே, இரண்டு ஆண்களும் தங்கள் முதல் இரண்டு லெக்கில் ஓடினார்.

முதல் லெக்கில் அனஸ் சிறப்பாக செயல்பட்டதால், இந்தியா சிறிது நேரம் முன்னிலை வகித்தது.  சனிக்கிழமையன்று புத்திசாலித்தனமான ஓடிய விஸ்மயா, இரண்டாவது லெக்கில் சறுக்கினார். விஸ்மயாவிற்கும் ஜிஸ்னாவிற்கும் இடையில் பேட்டனை மாற்றுவதில் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது, இது சனிக்கிழமை பந்தயத்திலும் இந்தியா விலைமதிப்பற்ற வினாடிகளை இழக்கச் செய்தது.

இந்தியாவால் இந்த சரிவில் இருந்து மீள முடியவில்லை, கடைசி லெக்கில் பிரேசில் தடகள வீரரை நிர்மல் முந்திக்கொண்டு இந்தியாவுக்கு 7 வது இடத்தைப் பிடித்தார்.

இந்த நிகழ்வில் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம் இந்திய அணி ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்களது இடத்தைப் பிடித்தது. சனிக்கிழமையன்று, இந்தியா அணி 3: 16.14 என்று, சீசனில் தனது சிறந்த நேரத்தை பதிவுசெய்தது.

இந்திய அணியில் ஹிமா தாஸ் மற்றும் அரோக்கியா ராஜீவ் காயங்களால் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை. அவர்கள் இல்லாத நிலையில், கேரளாவைச் சேர்ந்த அனஸ், விஸ்மயா, நிர்மல் மற்றும் ஜிஸ்னா ஆகியோரின் நால்வரும் தடகள உலகில் சிறப்பாக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment