இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 189 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சற்று போரடி வெற்றி பெற்றது. இதனால் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதே சமயம் முதல்போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி தொடரில் நீக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 188 ரன்களில் சுருட்டிய இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டியிருந்தாலும், பேட்டிங்கில் தொடக்க விக்கெட்டுகள் சரிவை சந்தித்தன. முதல் 4 விக்கெட்டுகளில் கில் மட்டும் 20 ரன்கள் எடுத்த நிலையில், இஷான், கோலி, சூர்யகுமார் ஆகியோர் ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்பினர். அதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி தொடக்கம் சரியாக அமைய வேண்டியது கட்டாயம்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மீச்செல் மார்ஷ் தவிர மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். பந்துவீச்சில் சற்று முன்னற்றம் இருந்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை. இதனால் இன்றைய போட்டியில் வெல்ல ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Australia in India, 3 ODI Series, 2023YS Raja Reddy Stadium, Cuddapah 07 June 2023
India 117 (26.0)
Australia 121/0 (11.0)
Match Ended ( Day – 2nd ODI ) Australia beat India by 10 wickets
விசாகப்பட்டிணம் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்தியா பேட்டிங்
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர் இதில் சுப்மான் கில் 2 பந்துகளில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கடந்த போட்டியை போல் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய கோலி நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். ராகுல் 9 ரன்களில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் அவுட் ஆனார். ஹர்திக் அடித்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் சென்ற பந்தை ஸ்மித் அற்புதமாக கேட்ச் பிடித்தார்.
அடுத்ததாக ஜடேஜா களமிறங்கி, கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ரன் சேர்த்து வந்த நிலையில், இந்த ஜோடியை நாதன் எல்லிஸ் பிரித்தார். கோலி 31 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆனார். ஜடேஜா 16 ரன்களில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து அக்சர் பட்டேல் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அடுத்து களமிறங்கிய குல்தீப் 4 ரன்களிலும், ஷமி மற்றும் சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆக இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
அக்சர் பட்டேல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்களையும், சீன் அபோட் 3 விக்கெட்களையும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
அடுத்ததாக எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரது விக்கெட்களையும் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர்.
மிட்செல் மார்ஷ் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாச, ஹெட் பவுண்டரிகள் மூலமே ரன்களை குவித்தார். இருவரும் அரை சதம் கடந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 11 ஓவரிகளிலே வெற்றி இலக்கை எட்டியது. ஹெட் 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடங்கும். மார்ஷ் 36 பந்தில் 66 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். ஆஸ்திரேலியா இந்த வெற்றி மூலம், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமநிலையில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/