Advertisment

India vs Australia 2nd ODI : சாய்ந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி!

India vs Australia 2nd ODI Live Cricket Score: 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia 2nd ODI :  சாய்ந்தது ஆஸ்திரேலியா.. இந்தியா அபார வெற்றி!

India vs Australia 2nd ODIIndia vs Australia 2nd ODI

India vs Australia 2nd ODI Live Cricket Score Updates: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் மிரட்டலாக ஆடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Advertisment

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி இந்திய அணி அங்கு வரலாற்றுச் சாதனை படைத்தது.

அடுத்தகட்டமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரோஹித் சர்மா சதம் அடித்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை. மூத்த வீரர் டோனி, விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினாலும் விரைவாக ரன் சேர்க்காதது பாதிப்பை ஏற்படுத்தியது.

அதைவிட ஷிகர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களின் வீழ்ந்ததே இந்தியா தோல்விக்கு காரணம். இந்தத் தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், இந்திய அணி இன்று ஜெயித்தாக வேண்டும்.

Ind vs Aus 2nd ODI Live Score: இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர்

சிட்னி ஒருநாள் போட்டியைப் போலவே ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் கலீல் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் அறிமுகம் செய்யப்பட்டார். வேறு மாற்றம் இல்லை. தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், சாஹல் ஆகியோர் அழைக்கப்படலாம் என்கிற ஆரூடம் பொய்யானது. டி.கே.வும், ஜட்டுவும் இன்னொரு வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

சரியாக காலை 8.50 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஓவரை இந்தியாவின் புவனேஸ்குமார் தொடங்கி வைத்தார்.

ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக அலேக்ஸ் கேரேராவும், கேப்டன் ஆரோன் ஃப்ன்சும் களம் இறங்கினர். ஆஸ்திரேலியா அணி 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்தது. ஆரோன் ஃப்ன்ச் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து முகமது வீசிய வேக பந்தில் அலேக்ஸ் கேரேரா, ஷீகர் தவானிடம் அலேக்காக கேட்சை தந்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடி வந்த ஷான் மார்ஷ் அரைசதமடித்தார். இந்த தொடரில் இது அவரது இரண்டாவது அரைசதமாகும். மார்ஷ் 54 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 27.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் ஹேண்ட்ஸ் கோம்ப்பை 20 ரன்னில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார் தோனி. 28 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் குவித்தது.

இதையடுத்து  36.4 ஓவரில் ஷமி வீசிய பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஸ்டோனின்ஸ். அவர் 36 பந்தில் 29 ரன்கள் குவித்திருந்தார்.  ஆஸ்திரேலியா 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

41 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். 109 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 100 ரன் குவித்தார். இது அவரது 7வது சர்வதேச சதமாகும்.

48வது ஓவரின் மூன்றாவது பந்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ் வெல் 37 பந்தில் 48 ரன்கள் குவித்து புவனேஷ்வர் குமார் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேர்ஷ் , மேக்ஸ்வெல் இணை 10 ஓவரில் 94 ரன்கள் குவித்தது. 5வது பந்தில் சதமடித்து சிறப்பாக ஆடி வந்த மார்ஷ் 123 பந்தில் 11 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 48 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதியில் 50 ஓவர் முடிவுக்கு ஆஸ்திரேலியா அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்துள்ளது.

இந்தியா பேட்டிங்

உணவு இடைவேளைக்கு பின்னர் தன்னுடைய இன்னிங்க்ஸை ஆரம்பித்தது இந்திய அணி.  ஷீகர் தவான் சிறப்பான தொடக்க ஆட்டத்தை அமைத்துத் தர, அதன் பின்பு களம் இறங்கினார் கேப்டன் விராட் கோலி.

கோலியுடன் ஜோடி சேர்ந்து ஆடி வந்த அம்பதி ராயுடு, 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். கோலி மறுமுனையில் 66 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியா 31 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது. கோலி 54 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 19 ஓவரில் 138 ரன்கள் தேவை.

அபாரமாக ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். இது அவரது 39வது ஒருநாள் சதமாகும். இந்தியா 42 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்துள்ளது. கோலி 100 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 48 பந்தில் 71 ரன்கள் தேவை.

தற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி களத்தில் உள்ளனர். 25 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது இந்திய அணி. 47.0 ஓவர் முடிவுகளுக்கு இந்தியா 274 ரன்கள் எடுத்துள்ளது. 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா.

இந்தியா 49 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்துள்ளது. இந்த சேஸிங்கில் இந்தியா வெற்றி பெற இன்னும் 6 பந்தில் 7 ரன்கள் தேவை. தோனி 48 ரன்களுடனும், கார்த்திக் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்.

49.2 ஓவரில் 299 ரன்களை எட்டி வெற்றி பெற்றது இந்திய அணி. இந்திய தரப்பில் கேப்டன் கோலி சதமடித்தார். தோனி அரைசதமடித்து 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அடிலெட்ய்டு ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டி மெல்பெர்னில் வரும் வெள்ளியன்று நடக்கிறது.

India Vs Australia Live Cricket Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment