Advertisment

472 ரன் முன்னிலை : 2ம் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்

ind vs aus test practice match : ஹனுமா விகாரி ( 104), ரிஷப பந்த் (103)  ஆகியோர் சதமடித்தனர். சுப்மன் கில் ( 65 ), மாயங் அகர்வால் (61) ஆகியோர் அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.

author-image
WebDesk
New Update
472 ரன் முன்னிலை : 2ம் நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்

இந்திய, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது பயிற்சி ஆட்டத்தின், 2வது நாள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 384 ரன் எடுத்தது.

Advertisment

இந்த போட்டியின்  இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன் எடுத்தது. அணியில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பும்ரா 55 ரன், சுப்மண் கில் 43 ரன், பிருத்வி ஷா 40 ரன் எடுத்தனர்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 32.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன் மட்டுமே சேர்த்தது. இதனால், இந்தியா தனது  முதல் இன்னிங்ஸில் 86 ரன் முன்னிலை பெற்றது.

இன்றைய, இரண்டாவது நாள் ஆட்டத்தில் தனது இரண்டவாது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தது.

 

 

ஹனுமா விகாரி ( 104), ரிஷப பந்த் (103)  ஆகியோர் சதமடித்தனர். சுப்மன் கில் ( 65 ), மாயங் அகர்வால் (61) ஆகியோர் அரை சதத்தை பூர்த்தி செய்தனர்.

 

 

 

இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில், நான்கு விக்கெட் இழப்புக்கு 384 ரன் சேர்த்தது. இதன் மூலம், ஆஸ்திரேலியா ஏ  அணியை விட 472 ரன் முன்னிலை வகிக்கிறது.

 

 

இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ஏ அணிகு எதிரான முதல் பயிற்சி ஆட்டம் சமனில் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment