Advertisment

மேக்ஸ்வெல் 'ஒன் மேன் ஷோ'! இந்திய மண்ணில் முதல் டி20 கோப்பை வென்ற ஆஸ்திரேலியா!

3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ind vs Aus 2nd T20 Live Cricket Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

Ind vs Aus 2nd T20 Live Cricket Score Updates: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

India vs Australia 2nd T20: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Advertisment

Aus vs Ind 2nd T20 Live Score: இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ்

22:26 PM - மேக்ஸ்வெல்லின் அபார இன்னிங்ஸ் காரணமாக, ஆஸ்திரேலியா 19.4வது ஓவரில் 194 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது. இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவின் முதல் டி20 தொடர் வெற்றி இதுவாகும்.

22:18 PM - மேக்ஸ்வெல் தனது மூன்றாவது டி20 சதத்தை பூர்த்தி செய்தார்.

22:10 PM - 40 பந்துகளில் 6 பிரம்மாண்ட சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து ஆக்ரோஷம் காட்டி வரும் மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.

09:45 PM - 13 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

08:55 PM - ஆஸ்திரேலியா தனது இன்னிங்சை தொடங்கியது.

08:50 PM - சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பவுண்டரி அடித்த வீரர்களில் விராட் கோலி, தில்ஷனுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

223 விராட் கோலி/ தில்ஷன்

218 முஹம்மத் சாஷத்

207 ரோஹித் ஷர்மா

200 மார்டின் கப்தில்

08:40 PM - கடைசி பந்தில் சிக்ஸருடன் விராட் ஆட்டத்தை முடிக்க, இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 38 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் ஆறு சிக்ஸர்கள் அடங்கும்.

08:35 PM - 23 பந்தில் 40 ரன்கள் எடுத்த தோனி, கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் கேட்ச் ஆனார்.

08:18 PM - கோல்டர் நைல் ஓவரில், கேப்டன் விராட் கோலி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

08:13 PM - தோனி - கோலி இணைந்து பார்ட்னர்ஷிப் கட்டமைக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவால் 170+ டார்கெட் வைக்க முடியுமா என்பது பெரிய ?.

07:56 PM - ரிஷப் பண்ட் லாங் ஆன்-ல் பவுண்டரி அடிக்க நினைத்து தூக்கி அடிக்க, ரிச்சர்ட்சனின் அபாரமான கேட்ச்சால் ஒரே ரன்னில் வெளியேறினார்.

07:50 PM - 24 பந்தில் 14 ரன்கள் எடுத்து தவான் கேட்ச் ஆனார். சுத்தமாக அவரது கனெக்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை. முதல் போட்டியில் தோனியின் கனெக்ட்லெஸ் ஆட்டத்தை, இப்போட்டியில் தவானிடம் பார்க்க முடிந்தது.

07:35 PM - லோகேஷ் ராகுல் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு, இந்தியாவின் அதிரடி இன்னிங்சை தொடக்கி வைத்தார். ஆனால், 47 ரன்களில், கேட்ச் ஆகி, அரைசதத்தை தவறவிட்டார்.

07:15 PM - இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமாக பேட்டிங் செய்து வருகின்றனர். தொடக்கத்தில் விக்கெட் இழக்கக் கூடாது என்பதில் முனைப்புடன் ஆடி வருகின்றனர்.

07:00 PM - இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது

06:45 PM - இந்திய அணி வீரர்கள் விவரம்

ஷிகர் தவா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி, விஜய் ஷங்கர், க்ருனல் பாண்ட்யா, சாஹல், பும்ரா, சித்தார்த் கவுல்

06:33 PM - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

India Vs Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment