India vs Australia 2nd Test Day 1 Score: இறுதிக்கட்டத்தில் சரிந்த ஆஸ்திரேலியா, வியூகத்தை மாற்றி இந்திய பவுலர்கள் அபாரம்

India vs Australia 2nd Test Day 1 Score: முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள்...

India vs Australia Cricket Score: உலகின் அதிவேக, பவுன்ஸ் பிட்ச் என்று அழைக்கப்படும் டேஞ்சரஸ் பெர்த் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இன்று 2வது டெஸ்ட் போட்டியில் மல்லுக்கட்டுகின்றன. இந்திய அணி ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கி இருந்தாலும், ஆஸ்திரேலியா தனது ஆஸ்தான ஸ்பின்னரான நாதன் லயனுடன் விளையாடுகிறது. கோலியின் முடிவு சரியானதா?.

இங்கே க்ளிக் செய்யவும்: இந்தியா, ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி, 2வது நாள் லைவ் அப்டேட்ஸ்

11வது ஓவரிலேயே பும்ரா மாற்றப்பட்டு, ஷமி பந்து வீச அழைக்கப்பட்டுள்ளார். முதல் பந்திலேயே, ஃபின்ச்சுக்கு LBW அப்பீல் கோரப்பட்டது. DRS வரை சென்றும், அது மிஸ் ஆனது. முதல் செஷனில் ஆஸ்திரேலியா தொடர்ந்து, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 25 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 64 ரன்கள் எடுத்துள்ளது. முதல் உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலியா 26 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 66 ரன்கள் எடுத்துள்ளது. ‘Green’ Pitch, Seam பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என போட்டி தொடங்கும் முன்பு வல்லுனர்கள் கூறிய அனைத்தும் தவறான கணிப்பாக அமைந்துவிட்டது. இந்திய பவுலர்களின் தடுமாற்றம் நம் கண் முன்னே தெரிகிறது. இறுதியாக இந்தியாவுக்கு சாதகமாக காற்று வீசியது. ஆரோன் ஃபின்ச் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 50 ரன்னில் ஃபின்ச் அவுட். மார்க்ஸ் ஹாரிஸை 70 ரன்னில் ஹனுமா விஹாரியும், உஸ்மான் கவாஜாவை 5 ரன்னில் உமேஷ் யாதவும் அடுத்தடுத்து வெளியேற்றினர். இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முதல் விக்கெட்டை 112 ரன்களுக்கு இழந்த ஆஸ்திரேலிய, அடுத்த ஐந்து விக்கெட்டுகளை 139 ரன்களில் இழந்துள்ளது.

அடிலைடில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 1-0 என லீடிங்கில் உள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது.

இந்திய வீரர்கள் நல்ல கான்ஃபிடன்சுடன் காணப்பட்டாலும், பெர்த் பிட்ச் இரு அணிகளுக்கும் ஆபத்தாக இருக்கும் என்பதே உண்மை.

Hard and Bouncy பிட்ச் என்பதால் பந்து தாறுமாறாக எகிறும். பேட்ஸ்மேன்களுக்கு இந்த பிட்ச் ஒரு சோதனையான களம் என்பதில் சந்தேகமில்லை.

ரோஹித் ஷர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹனுமா விஹாரி, புவனேஷ் குமார்/ரவீந்திர ஜடேஜா/உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் Seam பவுலர்களின் சொர்க்கபுரியாக இந்த பிட்ச் இருக்கப் போகிறது. எண்ணிலடங்காத பவுன்ஸ் தாறுமாறு பந்துகளை நாம் இன்று பார்க்கலாம். ஆனால், அதேசமயம் இதே பிட்சில் நடந்த உள்ளூர் போட்டியில், ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஆகவே, 3 Seam, 1 Spin என்று இந்தியா களமிறங்கினால் பெட்டராக இருக்கலாம்.

13 வீரர்கள் கொண்ட இந்திய அணி: விராட் கோலி (C), லோகேஷ் ராகுல், முரளி விஜய், செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (WC), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (WK), ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ்.

India vs Australia 2nd Test Day 1 Score: பரபரப்பான இப்போட்டியின் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டை நமது இந்தியன்எக்ஸ்பிரஸ் தளத்தில் நீங்கள் காணலாம்.

03:30 PM – இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. முதல் விக்கெட்டை 112 ரன்களுக்கு இழந்த ஆஸ்திரேலிய, அடுத்த ஐந்து விக்கெட்டுகளை 139 ரன்களில் இழந்துள்ளது.

2:51 PM – அவுட். அரை சதம் கடந்த டிராவிஸ் ஹெட், இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். THIRD-MAN திசையில் நின்று கொண்டிருந்த ஷமி சுலபமாக கேட்ச் பிடித்தார். 83 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 251-6

திமுகவில் இணைந்த பிறகு செந்தில் பாலாஜி பேட்டி :

2:27 PM-  அவுட். பகுதி நேர பந்துவீச்சாளர் ஹனுமா விஹாரி பந்துவீச்சில் இந்திய அணியை சற்று பயமுறுத்திய ஷான் மார்ஷ் (45 ) ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த ரஹானேவிடம் தன் விக்கெட்டை இழந்தார்ஆஸ்திரேலியா தற்பொழுது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

2:05 PM-  ஹன்ட்ஸ்காம் விக்கெட்டை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலியாவிற்கு ஷான் மார்ஷ் – டிராவிஸ் ஹெட் ஜோடி கை கொடுத்துள்ளது. ஐந்தாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி தற்பொழுது 62 ரன்கள் விரைவில் சேர்த்துள்ளது

01:20 PM – 60 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலியா.

01:10 PM – ஷான் மார்ஷ் vs உமேஷ் யாதவ் (டெஸ்ட்):

257 பந்துகள

107 ரன்கள்

எட்டு முறை அவுட் – ஒவ்வொரு 32 பந்திலும் மார்ஷ் அவுட்டாகியிருக்கிறார்.

உமேஷ் அதிக முறை அவுட்டாகிய பேட்ஸ்மேன் மார்ஷ் தான், மார்ஷ் அதிக முறை வீழ்ந்த பவுலர் உமேஷ் யாதவ் தான்.

12:55 PM – பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பின் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த். சீராக சென்றுக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

12:40 PM – டீ பிரேக் வரை, ஆஸ்திரேலியா 53 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

12:20 PM – மார்க்ஸ் ஹாரிஸை 70 ரன்னில் ஹனுமா விஹாரியும், உஸ்மான் கவாஜாவை 5 ரன்னில் உமேஷ் யாதவும் அடுத்தடுத்து வெளியேற்றினர்.

11:50 AM – 43 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 146.7 கி.மீ வேகத்தில் பந்து வீச, ஒரு நொடி ஜெர்க்கானா கவாஜா. வாவ் மொமன்ட் அது.

11:30 AM – ஒன்டவுன் வீரராக களமிறங்கி இருப்பவர் உஸ்மான் கவாஜா. பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிட்ட இந்த பெர்த் பிட்சில், நிச்சயம் இவர் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

11:15 AM – விக்கெட்…. இறுதியாக இந்தியாவுக்கு சாதகமாக காற்று வீசியது. ஆரோன் ஃபின்ச் விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார். 50 ரன்னில் ஃபின்ச் அவுட்.

10:55 AM – தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் அரைசதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அவரது முதல் அரைசதம் இது.

10:45 AM – ‘Green’ Pitch, Seam பவுலர்களுக்கு சாதகமாக இருக்கும் என போட்டி தொடங்கும் முன்பு வல்லுனர்கள் கூறிய அனைத்தும் தவறான கணிப்பாக அமைந்துவிட்டது. இந்திய பவுலர்களின் தடுமாற்றம் நம் கண் முன்னே தெரிகிறது. டாஸ் வென்று, ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் ஏன் பேட்டிங்கை தேர்வு செய்தார் என இப்போது புரிகிறது.

10:35 AM – லன்ச் முடிந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

10:20 AM – தடுமாறும் இந்தியா

10:00 AM – வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் விராட் தலைமையிலான இந்திய அணி, இதுவரை முதலில் பீல்டிங் செய்து வென்றது கிடையாது. கோலி தலைமையில், 104 ரன்களுக்கு மேல் நான்காவது இன்னிங்ஸில் இந்தியா சேஸிங் செய்தது கிடையாது.

09:55 AM – முதல் உணவு இடைவேளையின் போது, ஆஸ்திரேலியா 26 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 66 ரன்கள் எடுத்துள்ளது.

09:45 AM – முதல் செஷனில் ஆஸ்திரேலியா தொடர்ந்து, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 25 ஓவர்கள் முடிவில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 64 ரன்கள் எடுத்துள்ளது.

09:20 AM – விராட் கோலி டாஸ் ரெக்கார்டு,

வெற்றி – M 20; W 17; L 0; D 3

தோல்வி – M 24*; W 8; L 9; D 6

09:05 AM – 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 53-0.

08:45 AM – 11வது ஓவரிலேயே பும்ரா மாற்றப்பட்டு, ஷமி பந்து வீச அழைக்கப்பட்டுள்ளார். முதல் பந்திலேயே, ஃபின்ச்சுக்கு LBW அப்பீல் கோரப்பட்டது. DRS வரை சென்றும், அது மிஸ் ஆனது.

08:40 AM – 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 37-0. இஷாந்த்தின் ஓவரில் வேகமும் இல்லை, விவேகமும் இல்லை.

08:30 AM – இஷாந்த் வீசிய கடைசி ஓவரில், 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதால், 8வது ஓவருக்கே உமேஷ் யாதவ் பந்துவீச அழைக்கப்பட்டுள்ளார்.

08:20 AM – இந்திய அணி ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கி இருந்தாலும், ஆஸ்திரேலியா தனது ஆஸ்தான ஸ்பின்னரான நாதன் லயனுடன் விளையாடுகிறது. கோலியின் முடிவு சரியானதா?

08:10 AM – ஐந்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் – பும்ரா தொடக்க ஓவர்களை வீசி வருகின்றனர்.

07:50 AM – ஆட்டம் தொடங்கியது. வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்து இந்திய அணி சமாளிக்குமா?

07:40 AM – ஸ்பின்னர் இல்லாமல், இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இருப்பது இது நான்காவது நிகழ்வாகும்.

07:35 AMஇந்திய அணி வீரர்கள் விவரம்

விராட் கோலி (C), லோகேஷ் ராகுல், முரளி விஜய், செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (WC), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (WK), இஷாந்த் ஷர்மா, மொஹம்மத் ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, உமேஷ் யாதவ்.

 07:25 AM – கேப்டன் விராட் கோலி பேசும் போது, இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரியும், அஷ்வினுக்கு பதிலாக உமேஷ் யாதவும் களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.


07:20 AM – டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close