Advertisment

ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

India Vs Australia 2019 Score Updates: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india vs australia, india vs australia live score, india vs australia live scorecard, live cricket score, ind vs aus, ind vs aus 3rd odi, ind vs aus live score

india vs australia, india vs australia live score, india vs australia live scorecard, live cricket score, ind vs aus, ind vs aus 3rd odi, ind vs aus live score

India vs Australia 3rd ODI Scorecard:இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது.

Advertisment

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

சுதாரித்த இந்தியா : முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியதால், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தொடர் சமநிலையில் உள்ளது. இதனிடையே , மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, பெங்களூருவில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது.

இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஹாட் ஸ்டார் உள்ளிட்டவைகளில் கண்டு மகிழலாம்

Live Blog

India Vs Australia 2019 Live Score Updates.. : பெங்களூருவில் இன்று மேகமூட்டமாக காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. எனவே ரசிகர்கள் எவ்வித பயமுமின்றி போட்டியை கண்டு ரசிக்கலாம்.



























Highlights

    21:11 (IST)19 Jan 2020

    7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

    இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெ இழப்புக்கு 286 எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 119 ரன்களும் விராட் கோலி 89 ரன்களும் குவித்தனர்.

    20:24 (IST)19 Jan 2020

    ரோஹித் சர்மா அவுட்

    அதிரடி தொடக்க வீரர் ரோஹித் சர்மா 128 பந்துகளுக்கு 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆதம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    20:09 (IST)19 Jan 2020

    ரோஹித் சர்மா சதம்... விராட் கோலி அரைசதம்

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் அடித்தார். ஒன் டவுன் களம் இறங்கிய கேப்டன் கோலி அரை சதம் அடித்து விளையாடி வருகிறார்.

    19:43 (IST)19 Jan 2020

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி; ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தல்

    287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் நிதானமாகவும் நேர்த்தியாகவும் ஆடி 110 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை குவித்து சதம் அடித்து அசத்தியுள்ளார்.

    19:23 (IST)19 Jan 2020

    கே.எல்.ராகுல் அவுட்

    தொடக்க வீரராக களம் இறங்கிய கே.எல்.ராகுல், நிதானமாக ஆடி வந்த நிலையில், 19 ரன்கள் எடுத்திருந்த நிலயில், ஆஷ்ட்ன் அகர் பந்தில் எல்பிடபில்யூ முறையில் அவுட் ஆனார்.

    18:52 (IST)19 Jan 2020

    அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா

    தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா நிதானாமாக விளையாடி வருகிறார். தற்போது அவர் 56 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்துள்ளார்.

    18:26 (IST)19 Jan 2020

    ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதான ஆட்டம்

    287 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடிவருகின்றனர்.

    14:10 (IST)19 Jan 2020

    ஷமி பந்தி்ல நடையை கட்டினார் வார்னர்

    இந்திய பவுலர்களின் பந்துவீச்சு துல்லியமாக இருந்தது. 3.2 ஓவரில் ஷமி வீசிய பந்தில் வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸி., ஸ்கோர் 18/1 என்று இருந்தது.

    India Vs Australia 2019 Live Score Updates.. : இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் கடைசியாக இங்கு விளையாடிய 2 போட்டிகளில் 709, 647 ரன்கள் எடுத்துள்ளன. இரவில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணிக்கு சிக்கல் ஏற்படலாம்.
    India Live Cricket Score Australia
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment