Advertisment

இந்தியா Vs ஆஸ்திரேலியா 1st T20: மழையால் பாதித்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia, Indian cricket team, Australian cricket team, 1st T20 in Ranchi, IndVsAus Score and Updates,

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளிடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஆஷிஸ் நெக்ராவுக்கு இப்போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஷிகர் தவான் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இதேபோல, அக்‌ஷர் படேலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பிடித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Advertisment

இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்கரார்களாக கேப்டர் வார்னரும், ஆரோன் பின்ச்ம் களம் இறங்கினர். 8 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னர், புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தார்.

இதன் பின்னர் களம் இறங்கயிய மேக்ஸ்வெல் நிதானத்தையே கடைப்பிடித்தார். ஒரு முனையில் ஆரோன் பின்ச் அடித்து ஆட, அணியின் ஸ்கோர் 6.2 ஓவர்களில் 55 என்றிருந்தது. அப்போது, சாஹல் சுழலில் சிக்கிய மேக்ஸ்வெல் 17 ரன்களில் (16 பந்து, 2 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களத்திற்குள் புகுந்த ட்ரவிஸ் ஹெட், ஆரோட் பின்ச் உடன் இணைந்து விளையாடினார். அணியின் ஸ்கோர் 76-ஆக இருந்தபோது ஆரோன் பின்ச் 42 ரன்களில்(30 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்ஸர்) குல்தீப் யாதப் பந்தில் போல்டானார். இதனால், 10 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து, குல்தீப் யாதவ் பந்தில் ஹென்றிக்ஸ் 8 ரன்களில்(9 பந்து) போல்ட் ஆன நிலையில், விரைவிலேயே ட்ரவிஸ் ஹெட் 9 ரன்களில்(16 பந்து) ஹர்த்திக் பாண்ட்யா பந்தில் போல்ட் ஆனார். இதனால், 15 ஓவர்களின் முடிவில் ஆஸ்ரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். டிம் பைன் 17 ரன்களிலும்,(16 பந்து,1 பவுண்டரி, 1 சிக்ஸர் ) நைல் 1 ரன்னிலும்(2 பந்து) டேனியல் கிறிஸ்டியன் 9 ரன்களிலும் (13 பந்து) ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியை ரன் எடுக்க முடியாமல் இந்திய அணி கட்டுப்படுத்திய அந்த சமயத்தில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

ஆஸ்திரேலிய அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால், அந்த அணியின் இன்னிங்ஸ் அதோடு முடித்துக் கொள்ளப்பட்டது. இந்தியா சார்பில் பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சாஹல், புவனேஷ்வர், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சுமார் 1 மணி நேர ஆட்ட பாதிப்புக்கு பிறகு இந்தியாவுக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரியுடன் கணக்கை தொடங்கிய ரோகித் சர்மா 11 ரன்களில் போல்ட் ஆனார். பிறகு தவான் - விராட் கோலி இணை ஆஸ்திரேலிய பந்து வீச்சை பதம் பார்த்தது. முதல் 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களை இந்தியா சேர்த்தது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என ஆட்டம் பரபரப்பானது. ஆனால் 3-வது பந்தில் பவுண்டரி அடித்து விராட் கோலி வெற்றி இலக்கை எட்ட வைத்தார். இதனால் 3 பந்துகள் மீதம் வைத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்தது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் அபாரமாக பேட் ரன்களை குவித்த ஆஸ்திரேலியாவை, கடைசி கட்டத்தில் அற்புதமாக பந்துவீசி 18.4 ஓவர்களில் வெறும் 118 ரன்களில் மடக்கிய இந்திய பவுலர்களையே இந்த வெற்றி சேரும். ஆட்ட நாயகனாக 3 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய பும்ரா அறிவிக்கப்பட்டார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment