Advertisment

உலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை! ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு

ஒருநாள் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Australia series india team squad to be announce tomorrow - உலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை! ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு!

India vs Australia series india team squad to be announce tomorrow - உலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை! ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி நாளை (பிப்.15) வெளியாக உள்ளது. இதில் ரோஹித், தவான் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இம்மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வரும் 24-ம் தேதி பெங்களூரில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது போட்டியும் நடைபெறுகிறது.

மேலும் படிக்க - ஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்!

ஒருநாள் தொடர் மார்ச் 2-ல் ஹைதராபாத்திலும், மார்ச் 5-ம் தேதி நாக்பூரிலும், 3-வது போட்டி 8-ம் தேதி ராஞ்சியிலும், 10-ம் தேதி மொஹாலியிலும், 13-ம் தேதி 5-வது போட்டி டெல்லியிலும் நடக்கிறது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் நாளை (பிப்.15) அறிவிக்கப்பட உள்ளது. மும்பையில் நாளை நடைபெறவுள்ள தேர்வுக் குழு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20க்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இதில், டி20 தொடரில் இந்திய ஓப்பனர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் விராட் கோலி அணிக்கு மீண்டும் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இந்த ஓய்வு டி20 தொடருக்கு மட்டும் அளிக்கப்படலாம் என்றும், ஒருநாள் தொடரில் எந்தவித பரிசோதனை முயற்சியும் எடுக்கப்படாது என்றும், அதில் முக்கிய வீரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில், இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச தொடர் இது என்பதால், ஒருநாள் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக, நியூசிலாந்து தொடரில் கவனம் ஈர்த்த தமிழகத்தின் விஜய் ஷங்கர், வாய்ப்பு கிடைத்தும் ஜொலிக்காத ஷுப்மன் கில், பவுலிங்கில் சற்று தடுமாறும் புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், ப்ரித்வி ஷா போன்றோருக்கும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொடரில், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கே, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதால், நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா தொடருக்கான அணித் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

India Vs Australia Rohit Sharma Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment