வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

India vs England 3rd Test : இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை.

India vs England 3rd Test :

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட், டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகண்டது. இதனால் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 18 ஆம் தேதி ட்ரென்ட் பிரிட்ஜில் தொடங்கியது.ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்பில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றைய (21.8.18) 4 ஆம் நாள் ஆட்டத்தின் நிலவரப்படி இந்தியா பக்கம் வெற்றி காற்றி பலமாக வீசத் தொடங்கியது. வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்திய அணி ஜெயிப்பது உறுதி என்று ரசிகர்கள் ஆர்பரித்தன. இந்தியா வெற்றி பெற ஒரு விக்கெட்டே தேவைப்பட்ட நிலையில் 5 ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி கனியை ருசித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களை மிரள வைத்தது.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி :

இந்த போட்டிக்கான டாஸை வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 329 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 97 ரன்கள் அடித்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்துக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சிக் காத்திருந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த அணி சார்பில் பட்லர் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து லீட் ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மீண்டும் சிறப்பான பேட்டிஙை வெளிப்படுத்தியது. இம்முறை கேப்டன் விராட் கோலி சதமடிக்க, இந்திய 352 ரன்கள் எடுத்த போது டிக்ளர் செய்தது.

இலக்கை அடையும் நோக்கில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இங்கிலாந்து. இம்முறையும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பௌலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். பட்லர் மட்டும் அந்த அணி சார்பில் சதம் அடித்தார்.

இங்கிலாந்து 9 விக்கெட்டுகளுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் பாக்கி என்பதால், இந்தியா எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்தியா வெற்றிப்பெற 1 விக்கெட் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், 5-வது நாள் ஆட்டம் துவங்கியதும் எதிபார்த்தது போலவே, இந்திய அணி 10-வது விக்கெட்டையும் உடனடியாக வீழ்த்தி வெற்றியை ருசித்தது. 104.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அடைந்த தோல்வியால் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி, 3-வது டெஸ்டில் வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஆக.30 ஆம் தேதி துவங்குகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close