Advertisment

இது அடுக்குமா கோலி? பொங்கி வந்த புஜாராவை திருப்பி அனுப்பலாமா?

'என் ரூட் பீல்டிங் தான்'-னு ரூட் பிசிறாம சொல்ல, இந்தியாவின் சோதனை அப்போதே தொடங்கியாச்சு!.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs England

India vs England

India vs England

Advertisment

மேகம் கருக்குது.. மின்னல் சிரிக்குது... சாரல் அடிக்குது... விக்கெட் பறக்குது...!

நேற்றைய 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தை சுருக்கமாக சொல்லணும்னா இப்படித்தான் சொல்லணும்.

மழை பீதி, காற்று, ஸ்விங் பிட்ச் கண்டிஷன் என பல டஃப் மொமன்ட்ஸுக்கு இடையே விராட் கோலியும், ஜோ ரூட்டும் டாஸ் சுழற்ற வந்தனர். 'மழ பேஞ்சா என்ன.. ஸ்விங் ஆனா என்ன'-னு எந்த கவலையும் இல்லாம, ரிலாக்ஸா தான் ரூட் வந்தாப்ல. ஆனா, நம்ம கேப்டன் கோலியோ, 'நா என்னத்தனு சொல்லுவேன்'ங்கற பீலிங்க வெளியில காட்டிக்காம மனசுக்குள்ளயே துக்கத்தை அடக்கி வச்சுக்கிட்டு தான் வந்தாப்ல. என்ன பண்றது! நார்மலான பிட்சுலயே, நம்மள திணற விடுறானுங்க.. இதுல, Sullen Skies கிளைமேட்டுல விளையாண்டா, எப்படி தாக்குப் பிடிக்குறது-னு தான் விராட்டுக்கு கவலை.

ஆனா, யார் டாஸ் ஜெயிச்சாலும் ஃபீல்டிங் ச்சூஸ் பண்ணிடனும்-னு ரொம்பவே இரு கேப்டன்களும் உறுதியா இருந்தாங்க.. ஆனா, போதாதகுறைக்கு ஆண்டவனும் சோதிக்க, டாஸ் ரூட்டுக்கு விழ, 'என் ரூட் பீல்டிங் தான்'-னு ரூட் பிசிறாம சொல்ல, இந்தியாவின் சோதனை அப்போதே தொடங்கியாச்சு!.

தவானுக்கு பதிலா புஜாரா, உமேஷ்க்கு பதிலா குல்தீப் என இந்தியன் டீமுல இரண்டு மாற்றம். இங்கிலாந்து டீமுலயும் இரண்டு மாற்றம்.

அடிச்சியா இல்லியா?..

'என்ன அடிச்சியா இல்லியா?'

பார்ல அவன் மூக்க உடச்சியா இல்லியா?

'என்ன உடச்சியா இல்லியா?'

போன வருஷம், ஒரு பார்-ல பென் ஸ்டோக்ஸ் போட்ட ஃபைட்டுக்கு, இப்படித் தான் நேத்துல இருந்து அவருட்ட விசாரணை பண்ணிக்கிட்டு இருக்காங்க. போலீஸ் விசாரணைக்காக ஸ்டோக்ஸ் ஆஜராக வேண்டும் என்பதால, அவருக்கு பதிலா க்ரிஸ் வோக்ஸ் இந்த மேட்சுல சேர்க்கப்பட்டார். அதேபோல், மொயின் அலிக்கு பதிலாக ஒல்லே போப் தேர்வானார்.

இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Good Technique

Luck

இந்த இரண்டும் இருந்தால் தான் இந்த மேட்சில் டீம் இந்தியா, ஓரளவுக்கு ரன்களை சேர்க்க முடியும் என்று, லார்ட்ஸ் கிரவுண்டுல இருந்த Ball Boy வரைக்கும் தெளிவாக தெரிஞ்சுது. அது நம்ம டீமுக்கு மட்டும் தெரியாம இருக்குமா என்ன? நடக்குறது நடக்கட்டும்-ன்னு தான் முரளி விஜய்யும் - லோகேஷ் ராகுலும் களத்திற்கு வந்தனர்.

கிளைமேட் தனக்கு சாதகமாக இருந்ததை, கச்சிதமாக பயன்படுத்திய ஜேமி ஆண்டர்சன், ஃபர்ஸ்ட் பந்துலேயே 'தீப்பொறி திருமுகம்'மா மாறிப் போனார்.

முதல் ஓவர்... 5வது பால்... வாடா கண்ணான்னு- நேரா பந்தை எதிர்பார்த்து காத்திருந்த விஜய்யை, வடிவேலு அருவாள தூக்கிக்கிட்டு ஓடிவந்து வெட்டாம, அப்படியே சைடு வாங்கி, காம்ப்பவுண்ட் சுவர தாண்டி குதிச்சு ஓடுவதை போல, அவுட் ஸ்விங்கான பந்து, விஜய்யின் ஆஃப் ஸ்டெம்ப்பை காலி செய்தது.

நம்ம விஜய்யோ மெட்ராஸ் ஃபீல்ல ஆடுவதை போல, சும்மா கேஷுவலா Across the Line ஆட நினச்சு, பேட்டை திருப்புனா, பந்து வக்கிரமா வச்சு செஞ்சது.

டெஸ்ட் மேட்சுல, அதுவும் முதல் ஓவர்ல, அதுவும் இங்கிலாந்துல, அதுவும் ஆண்டர்சன் மாதிரி New Ball Magician-ஐ போய் Across the Line ஆடுனது உலகத்திலேயே நம்ம முரளி விஜய்யா தான் இருக்க முடியும்!!

 அப்புறம் என்ன பண்றது.. 0 ரன்னில் விஜய் நடையைக் கட்ட, ஒன்டவுன் இறங்கினார் புஜாரா.

'தொடுவனா பந்தை' என்ற மோடிலேயே விளையாடிக் கொண்டிருந்தார்.

லோகேஷ் ராகுலை பற்றித் தான் போன மேட்சுலயே நாம பேசியிருந்தோம். 'நான் ஃபார்மில் தான் இருக்கேன்னு' நம்புறதும் அவருதான்... 'அய்யயோ அவுட்டாகிடுவனோ'-னு பயப்படுறதும் அவர் தான். பாவம்! அவர் என்ன பண்ணுவார்! 6.1வது ஓவரை வீசிய ஆண்டர்சனின் பந்தை, 'ரெண்ட்ருவா தாண்டா கேட்டேன்' மோடில், அப்பாவியாய் ராகுல் தொட, அது நேரா பேர்ஸ்டோ கையில் உட்கார்ந்தது. 8 ரன்னில் அவுட்.

ராகுலின் அந்த விக்கெட், சொந்த மண்ணில் ஆண்டர்சனின் 350வது விக்கெட்டாக அமைந்தது.

சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்:

493 - முரளிதரன்

350 - அனில் கும்ப்ளே / ஆண்டர்சன்

319 - வார்னே

289 - மெக்ரத்

275 - ஹெராத்

265 - ஹர்பஜன்

261 - பிராட்

அப்புறம் இறங்கினார், 'தங்க தளபதி' விராட் கோலி. புஜாராவும், கோலியும் விக்கெட் வீழ்ச்சியை கொஞ்ச நேரத்துக்கு தடுத்து வைத்திருந்தனர். ஆனால், அந்த சோகமான சம்பவம் அரங்கேறுவதற்கு முன்பு வரை...

8.3வது ஓவர்... ஆண்டர்சர் புஜாரவுக்கு வீச, படு கேஷுவலாக புஜாரா ஸ்டோக் செய்ய, திடீரென விராட் ரன்னிங் அழைக்க, 26 வருடங்களுக்குப் பிறகு திறந்துவிடப்பட்ட இடுக்கி அணை நீரைப் போல புஜாரா பாய்ந்து வர, சட்டென்று 'வேண்டாம்' என கத்தினார் கோலி.

யோவ்... இப்படி பாதியில சொன்னா எப்படியா நிக்குறது? இடுக்கிக்கு தடுக்கா!!?-னு மீண்டும் திரும்ப முடியாமல், புஜாரா அப்படியே ஓடி வர, விராட் கோலியால் தேவையில்லாமல் ரன் அவுட் செய்யப்பட்டார்.

25 பந்தில் 1 ரன். புஜாரா பரிதாபமாக வெளியேற.. மழைக்கே அது பொறுக்கல போல... கையோடு கொட்ட, அனைவரும் பெவிலியன் திரும்பினர்.

ரொம்ப நேரம் கழிச்சு, மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ரஹானே - கோலி ஆன் த ஃபீல்ட்.

இருவரும் எவ்வளவோ ட்ரை செய்தும், ம்ஹூம்.. ஒன்றும் செய்ய மிடில... 21.3 வது ஓவரில் வோக்ஸ் பந்தில், விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து 23 ரன்னில் கோலி வெளியேற, அதன்பின், வெள்ளிக்கிழமை ரிலீசாகி, 'எப்ப வந்துச்சு, போனுச்சு-னே தெரியாத படங்களைப் போல, வீரர்கள் வந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

ரஹானே 18, பாண்ட்யா 11, தினேஷ் கார்த்திக் 1 என ரன்களை கம்போஸ் செய்ய, நம்ம அஷ்வின் கொஞ்சம் தாக்குப்பிடிச்சு 29 ரன்கள் எடுத்தாப்ல. கடைசியா, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில், 35.2வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இந்தியா 107 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

26: ஜேமி ஆண்டர்சன் மட்டும் 5 விக்கெட். இது அவருடைய 26வது 5 விக்கெட் பெருமையும் கூட. இன்னும் ஒருமுறை ஒரே டெஸ்ட் மேட்சுல 5 விக்கெட் எடுத்தா, இயான் போத்தமின் 27வது முறை எனும் சாதனையை ஈக்குவல் பண்ணிடுவாப்ள. அட்வான்ஸ் வாழ்த்துகள் சொல்லி வைப்போம்.

549: நேற்று 5 விக்கெட் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அவரது விக்கெட் எண்ணிக்கை 549 என்றானது. இன்னும் 14 விக்கெட் எடுத்தால், டெஸ்ட் போட்டிகளில் அதிக வீழ்த்திய (563) மெக்ராத்தின் சாதனையை, ஜேமி சமன் செய்துவிடுவார்.

99: லார்ட்ஸ் மைதானத்தில் 99 விக்கெட்டை ஜேமி கைப்பற்றியுள்ளார். ஒரே மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் நம்ம முரளிதரன் 111-காலே, 117-கண்டி, 166 கொழும்பு என்று டாப் ரேங்கிங்கில் உள்ளார்.

ஆக மொத்தம், தற்போதையை சூழலில் கிரவுண்டுல நல்லா காத்து வீசுது. ஆனா, அது இங்கிலாந்து பக்கமே வீசுது.

சுருக்கமா ஃபினிஷிங் என்ட் கொடுக்கணும்-னா, Lord's இந்திய அணியை அந்த Lord தான் காப்பாத்தணும்.

James Anderson
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment