India vs England 1st ODI Live Score Card: இந்தியா vs இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
Here’s the Playing XI for the 1st ODI.#ENGvIND pic.twitter.com/118ptVjP0w
— BCCI (@BCCI) 12 July 2018
இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற பிறகு, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இன்று (ஜூன் 12) மாலை ஐந்து மணிக்கு தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
மேலும் படிக்க: இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி: வெல்லப் போவது யார்?
இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஷ் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு பதில் சித்தார்த் கவுல் வாய்ப்பு பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி, 38 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. ஒருகட்டத்தில், 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இணை அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளது. பட்லர் அரைசதம் கடந்து ஆடி வருகிறார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, எம் எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ்.
India vs England Live Streaming: இந்தியா vs இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி, இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.