Advertisment

நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்திய அணி

India vs New Zealand 2nd T20 Full Scorecard : நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி இந்த போட்டியிலும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
india vs New Zealand, india vs New Zealand live, india vs New Zealand live cricket score, live cricket scorecard, ind vs NZ, ind vs NZ 2nd T20 score, ind vs NZ t20 live score, ind vs NZ 2nd T20 live score

india vs New Zealand, india vs New Zealand live, india vs New Zealand live cricket score, live cricket scorecard, ind vs NZ, ind vs NZ 2nd T20 score, ind vs NZ t20 live score, ind vs NZ 2nd T20 live score

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.

Advertisment

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா - நியூசிலந்து அணிகள் இடையே இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்). ரோகித் சா்மா, கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சஹல், முகம்மது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி,வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் குப்டில், ராஸ் டெய்லர், ஸ்காட் குஜ்ஜிலின், கோலின் முன்ரோ, கோலின் டி கிராண்ட்ஹோம், டாம் புருஸ், டாரில் மிட்செல், மிட்செல் சான்ட்னர், டிம் செய்பெர்ட் (விக்கெட் கீ்ப்பர்), ஹமீஷ் பென்னட், ஐஸ் ஷோதி, டிம் சவுத்தீ, பிளெய்ர் டிக்னர் ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் வீரர்கள் மிகவும் சிறப்பாக் விளையாடினர். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து எளிதாக நியூசிலாந்து அணியை வென்றது.

Live Blog

IND vs NZ 2nd T20 Live Score: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் உள்ளிட்ட சேனல்களில் ஒளிபரப்பாக உள்ளது. உடனடி ஸ்கோர், விக்கெட்டுகள் குறித்து தெரிந்துகொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்..



























Highlights

    15:36 (IST)26 Jan 2020

    நியுஸிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இந்திய அணி!

    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது.

    15:19 (IST)26 Jan 2020

    வெற்றியின் விளிம்பில் இந்தியா

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 15 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 103 ரன்களை எடுத்துள்ளது. 

    14:15 (IST)26 Jan 2020

    இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு

    இந்திய அணிக்கு 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்திய தரப்பில், ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

    13:22 (IST)26 Jan 2020

    ஜடேஜா அசத்தல்

    நியூசிலாந்து அணி துவக்கம் சிறப்பானதாக அமைந்தநிலையில், தற்போது தடுமாறி வருகிறது. 11.5 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. 3வது விக்கெட்டான கிராண்ட்ஹோம் விக்கெட்டை, ஜடேஜா Caught & bowled! முறையில் விக்கெட்டை கைப்பற்றினார்.

    13:09 (IST)26 Jan 2020

    இந்திய அணி பவுலிங்கில் அசத்தல்

    நியூசிலாந்து அணி 10 ஓவர்களுக்குள் துவக்க வீரர்கள் இருவரையும் இழந்துள்ளது. நியூசிலாந்து அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.  குப்டில் 33 ரன், முன்ரோ 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  இந்திய தரப்பில் தாகூர் மற்றும் துபே தலா 1 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

    12:33 (IST)26 Jan 2020

    நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து வருகிறது. துவக்க வீரர்களாக குப்டில், முன்ரோ களமிறங்கியுள்ளனர். நிதானமான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    IND vs NZ 1st T20 Live Score: மழை வருமா : போட்டி நடைபெறும் ஆக்லாந்து மைதானத்தில் இரவு 8 மணி வரை வெயில் அடிக்கும். மழைக்கு வாய்ப்பில்லை.

    யாருக்கு சாதகம் : இந்த மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்திய அணி சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது.

    India Live Cricket Score New Zealand
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment