Advertisment

எட்டு ஆண்டுகளில் இல்லாத மெகா சொதப்பல்! டி20 வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி!

Ind vs NZ 1st T20: 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா தோல்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எட்டு ஆண்டுகளில் இல்லாத மெகா சொதப்பல்! டி20 வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி!

India vs New Zealand T20 Cricket Score: இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் க்ருனல் பாண்ட்யா, ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து மெகா அதிரடி ஆட்டத்தை தொடுத்து வருகிறது. புவனேஷ், கலீல் என இந்திய Pacer-களின் பந்துகள் சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்து கொண்டிருக்கின்றன.

Advertisment

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என இந்தியா வென்ற பிறகு, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இதுவரை இந்தியாவும், நியூசிலாந்தும் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், 2 போட்டியில் மட்டுமே இந்தியா வென்றிருக்கிறது. வெற்றிச் சதவிகிதம் 25.00. ஐசிசியில் முழு நேர மெம்பர்களாக உள்ள அணிகளில், நியூசிலாந்திடம் மட்டுமே இந்திய அணி இவ்வளவு குறைவான டி20 வெற்றி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க - நியூசிலாந்துக்கு திருப்பித் தர வேண்டிய நேரம் இது! - கோலி இல்லாமல் சாதிப்பாரா ரோஹித்?

நியூசிலாந்திற்கு எதிரான தங்களது முந்தைய மோசமான சாதனைகளை திருத்தி எழுத வேண்டிய கட்டாயம் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு உள்ளது. அதுவும், விராட் கோலி துணையின்றி. அதேசமயம், ஒருநாள் தொடரில் அனுபவித்த வேதனையை, டி20ல் இந்தியாவுக்கு திருப்பிக் கொடுக்க நியூசிலாந்தும் மெகா தீவிரம் காட்டும்.

இந்திய நேரப்படி இன்று (ஜன.7) மதியம் 12:30 மணிக்கு முதல் டி20 போட்டி தொடங்கியது.

NZ vs Ind 1st T20 Score: இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20

15:45 PM - முடிவில், இந்திய அணி 19.2வது ஓவரில் 139 ரன்களில் ஆல் அவுட் ஆனது. டி20 வரலாற்றில் சேசிங்கில் இந்தியாவின் மிகப்பெரிய தோல்வி இதுவேயாகும். இதற்கு முன்னதாக, தோனி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. எட்டு வருடங்களுக்குப் பிறகு, தற்போது 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இப்போது மாபெரும் சேஸிங் தோல்வியை சந்தித்துள்ளது.

15:30 PM - இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நெருங்கிவிட்டது. பேட்ஸ்மேன்களில் தோனி மட்டுமே களத்தில் உள்ளார்.

15:00 PM - தவானைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 4 ரன்னிலும், விஜய் ஷங்கர் 27 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

14:42 PM - தவான் அவுட்! லோகி ஃபெர்கியூசனின் அபாரமான ஸ்விங் யார்க்கரில், ஷிகர் தவான் ஸ்டம்புகள் சிதற போல்டானார். 18 பந்தில் 29 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.

14:28 PM - ரோஹித் அவுட். ஐந்து பந்துகளை சந்தித்த கேப்டன் ரோஹித், 1 ரன்னில் சவுதி பந்தில் கேட்ச் ஆனார்.

14:18 PM - இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கியது.

14:05 PM - மைதானம் மிகச் சிறியதாக இருந்ததாலும், இந்திய பவுலர்களின் துல்லியமற்ற பவுலிங்கினாலும் நியூசிலாந்து 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது.

13:38 PM - மிட்சல் 8 ரன்னில் அவுட்!. தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.

13:24 PM - அட்டகாசமாக அடி வந்த டிம், கலீலின் யார்க்கர் பந்தில் போல்டானார். 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

13:18 PM - ஒன் டவுன் வீரராக கேப்டன் கேன் வில்லியம்சன் இறங்கியுள்ளார். இவரது ஆட்டம், புயல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரன் ரேட்டை குறைக்கலாம். இருப்பினும், டிம் தொடர்ந்து ஆக்ரோஷமாக அடி வருகிறார்.

13:06 PM - ஓப்பனர் டிம் தனது முதல் டி20 அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதேசமயம், காலின் மன்ரோ 34 ரன்களில் க்ருனல் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார்.

13:00 PM - நியூசிலாந்து 7 ஓவர்கள் முடிவில் 74 ரன்கள் எடுத்துள்ளது. ரன் ரேட் 10.57

12:45 PM - நியூசிலாந்து மெகா அதிரடி ஆட்டத்தை தொடுத்து வருகிறது. புவனேஷ், கலீல் என இந்திய Pacer-களின் பந்துகள் சிக்சர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பறந்து கொண்டிருக்கின்றன.

12:30 PM - நியூசிலாந்து தனது இன்னிங்சை தொடங்கியது... நியூசிலாந்தின் வெற்றி தொடருமா? இந்தியாவின் முதல் வெற்றி பதிவாகுமா?

12:15 PM - இந்திய அணி பிளேயிங் XI

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், எம் எஸ் தோனி(w), ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, புவனேஷ் குமார், யுவேந்திரா சாஹல், கலீல் அஹ்மது.

12:03 PM - டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியில் க்ருனல் பாண்ட்யா, ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளனர்.

India Vs New Zealand Mahendra Singh Dhoni Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment