Advertisment

ரோகித், சூர்யகுமார் யாதவ் அதிரடி; முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

India vs NewZealand 1st T20 match updates: முதல் டி20 கிரிக்கெட்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

author-image
WebDesk
New Update
ரோகித், சூர்யகுமார் யாதவ் அதிரடி; முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது

Advertisment

டி20 உலக்கோப்பை தொடரில் இந்தியா, அரையிறுதிக்குச் செல்ல முடியாமல் வெளியேறியதற்கு பிறகு, முதல் தொடரில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. மேலும் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி விலகியுள்ள நிலையில், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி மீது அதிக எதிர்ப்பு உள்ள நிலையில் இந்த தொடர் நடைபெறுகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது. இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணிவிவரம்: ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அக்சர் படேல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், சிராஜ்

நியூசிலாந்து அணி விவரம்: கப்தில், மிட்செல், சாப்மேன், பிலிப்ஸ், செய்பெர்ட், ரச்சின் ரவிந்த்ரா, சாண்ட்னர், சௌதி, அஸ்டில், பெர்குசன், போல்ட்

நியூசிலாந்து அற்புத ஆட்டம்

நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் மிட்செல் களமிறங்கினர். இதில் மிட்செல் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். புவனேஸ்வர் குமார் மிட்செலை போல்டாக்கினார். பின்னர் களமிறங்கிய சாப்மேன், கப்திலுடன் ஜோடி சேர்ந்து இருவரும் அற்புதமாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இருவரும் 2 ஆவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், சாப்மேன் 63 ரன்களுக்கு அவுட் ஆனார். அஸ்வின் அவரை போல்டாக்கினார். 50 பந்துகளைச் சந்தித்த சாப்மேன் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உள்பட 63 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து 164/6

அதே ஒவரிலே பிலிப்ஸ் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 150 ரன்களை தொட்டப்போது கப்திலை வீழ்த்தினார் தீபக் சாஹர். கப்தில் 42 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். அடுத்து களமிறங்கிய செய்பெர்ட் 12 ரன்களிலும், ரவிந்த்ரா 7 ரன்களிலும் அவுட் ஆக நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் நிதானமாக விளையாட, கேப்டன் ரோகித் அதிரடியாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 50 ரன்களைத் தொட்டப்போது ராகுல் 15 ரன்களில் வெளியேறினார். 14 பந்துக்களைச் சந்தித்த ராகுல், சாண்ட்னர் பந்தில் சாப்மேனிடம் கேட்ச் ஆனார்.

ரோகித் சர்மாவோடு ஜோடி சேர்ந்த சூர்யக்குமார் யாதவ்வும் அடித்து ஆடினார். அரைசதத்தை நெருங்கிய நிலையில் ரோகித் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் 36 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து, போல்ட் பந்தில் ரவிந்த்ராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் ரோகித் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் அடித்திருந்தார்.

சூர்யகுமார் அரைசதம்

பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக விளையாட, அற்புதமாக விளையாடிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 144 ரன்களாக இருந்தப்போது சூர்யகுமார் போல்ட் பந்தில் போல்டானார். சூர்யகுமார் 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

இந்தியா வெற்றி

அடுத்ததாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இருப்பினும் பொறுப்புடன் விளையாடிய ரிஷப் பண்ட் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதில், கடைசி ஓவரில் பந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் வைடு மற்றும் பவுண்டரி உள்பட 5 ரன்கள் கிடைத்த நிலையில், அடுத்தப் பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்து வைடாக, அதே பந்தில் அக்சர் படேல் ஒரு ரன் எடுத்து, ரிஷப் பண்டிடம் பேட்டிங்கை கொடுத்தார். அடுத்த பந்திலே பந்தை பவுண்டரிக்கு விளாசி ரிஷப் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்களும், சௌதி, சாண்ட்னர், மிட்செல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இதனையடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rohit Sharma Cricket Live Cricket Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment