வாவ்! பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தனை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாலம்பூரில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதில், இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், சிட்ரா நவாஸ்  தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

— BCCI Women (@BCCIWomen) June 9, 2018

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன், தங்கள் அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பவுலிங்கில் இரு லாரிக்கு இடையே சிக்கிய எலியை போல சிக்கி சின்னாபின்னமானது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 72 ரன்களே எடுத்தது. 7 வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட்டில் நடையை கட்டினர். அதிகபட்சமாக சனா 20 ரன்கள் எடுத்தார். இந்திய வீராங்கனை ஏக்தா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 16.1வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. மந்தனா 38 ரன்களில் அவுட்டாக, கேப்டன் கவுர் 34 ரன்களுடன் இறுதிவரை நாட் அவுட்டாக இருந்து வெற்றியை வசப்படுத்தினார். 

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மலேசிய அணியும், வங்கதேச அணியும் அணியும் மோதுகின்றன. இதில் வெற்றிப் பெறும் அணியுடன் இந்தியா வரும் ஞாயிற்றுக் கிழமையன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோத உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் வெற்றிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

×Close
×Close