Advertisment

IND vs PAK: பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி... துபாய் மைதானம் யாருக்கு சாதகம்?

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலககோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
IND vs PAK: பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி... துபாய் மைதானம் யாருக்கு சாதகம்?

ஆசிய கண்டத்தை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும் ஆசியகோப்பை 2022 டி20 தொடர் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற பி பிரிவு முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. தொடர்ந்து இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

Advertisment

இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ பிரச்சினை காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதி வரும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் விளையாடியது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலககோப்பை தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் அணியும் வெற்றியை தொடர முனைப்பு காட்டும்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி இல்லாதது இரு அணிகளுக்கும் பின்னவுதான் என்றாலும் இந்திய அணியில் ரிஷாப் பந்த், தீபக் ஹூடா மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும், பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோரும் பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா vs பாகிஸ்தான்

இந்தியா பிளேயிங் லெவன்

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான் பிளேயிங் லெவன்

முகமது ரிஸ்வான், பாபர் ஆசம் (கே), ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், இப்திகார் அகமது, நசீம் ஷா, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன்

இந்தியா vs பாகிஸ்தான்: பிட்ச் ரிப்போர்ட் மற்றும் டாஸ்

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களில் சொர்க்க பூமியாக உள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராக 2013 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை 211 ரன்கள் எடுத்தது. அதேபோல் மார்ச் 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 55 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதே குறைந்தபட்ச ஸ்கோராகும்.

சராசரியான இந்த மைதானத்தில் 140 ரன்களாக எடுத்தாலும் அது சிறப்பாக இருக்கும். 160-170 ரன்கள் எடுத்தால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும். வானிலை நிலவரப்படி டாஸ் வெல்லும் அணிக்கு சாதகமாக இருக்கும். பனி பொழிவு இருக்கும் என்பதால், சேசிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2022, மேட்ச்-2 – போட்டி நேரடி ஒளிபரப்பு

ஆசியா கோப்பை 2022க்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் பார்ககலாம். அதேபோல் டிஸ்னி + ஹாஸ்டாரில் பார்க்கலாம். போட்டி இரவு  7.30 மணிக்கு தொடங்குகிறது

இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் இதுவரை நேருக்கு நேர்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மொத்தம் 200 போட்டிகளில் மோதிய இந்திய அணி 71 போட்டிகளில் வெற்றியும் 87 முறை தோல்வியும் கண்டுள்ளது. தவிர, 42 போட்டிகள் முடிவு ஏதுமின்றி முடிந்தது. ஒருநாள் போட்டிகளில், 73 தோல்வி மற்றும் 55 வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 முறை வென்று்ளது.

இந்தியா vs பாகிஸ்தான் கணிப்பு

டாப் ஆர்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால் இந்தியா பாகிஸ்தானை விட ஒரு வலிமை கொண்டிருக்கும் அதே வேளையில், துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பதால், பாகிஸ்தானுக்கு துபாய் 2வது ஹொம் கிரவுண்ட் என்று சொல்லாம். அதேசமயம் பேட்டிங்கை பொறுத்தவரை இந்தியா சேஸ் செய்யவே அதிகம் விரும்புகிறது.

வானிலை முன்னறிவிப்பு

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வானிலை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மிகவும் ஈரப்பதமாக இருக்கும். போட்டியின் முடிவை தீர்மானிக்கும் காரணியாக டாஸ் இருக்கும். மழை பெய்ய வாய்ப்புகள் குறைவு.

இரு அணிகளின் முக்கிய வீரர்கள்

விராட் கோலி vs ஷதாப் கான்

விராட் கோலி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை எதிர்கொள்வது போட்டியின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும். கோலி லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக திணறி வருவதால், ஷதாப்பை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பாபர் அசாம் vs புவனேஷ்வர் குமார்

ஒரு சரியான ஸ்விங் மற்றும் வேகத்துடன், புவனேஷ்வர், லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். மறுபுறம், பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாக பேட் மூலம் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஐசிசி டி20 சர்வதேச தரவரிசையின்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் மற்றும் டிடுவென்டி தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்திலும், டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் குமார் 10வது இடத்திலும் உள்ளார்.

ஹர்திக் பாண்டியா vs ஹரிஸ் ரவுஃப்

ஹர்திக் பாண்டியா சிறப்பான ஃபார்மில் இருப்பதால், பந்து வீச்சாளர்களை வீழ்த்தி விடுவார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் போது கேப்டனாக தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதால், பாண்டியாவுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. மறுபுறம், கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஹாரிஸ் ரவுஃப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment