Advertisment

#RSAvsIND முகம்மது ஷமியின் சாதனையும், ரோகித் சர்மாவின் வேதனையும்!

அதிவேக 100 விக்கெட் வீழ்த்திய இந்தியர்களில் 3-வது இடத்தை முகம்மது ஷமி பிடித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இதை எட்டினார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs South Africa 2nd Test, Mohammed Shami, Rohit Sharma

India vs South Africa 2nd Test, Mohammed Shami, Rohit Sharma

அதிவேக 100 விக்கெட் வீழ்த்திய இந்தியர்களில் 3-வது இடத்தை முகம்மது ஷமி பிடித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைக் கல்லை எட்டினார்.

Advertisment

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் பாப் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென்ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது நாள் ஆட்டம் நேற்று (14-ம் தேதி) தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கேசவ் மகராஜ் அவுட்டானார். அரை சதமடித்த டு பிளசிஸ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்ஆப்ரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 335 ரன்கள் எடுத்தது.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்களும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

அடுத்து இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும் போது லோகேஷ் ராகுல் 10 ரன்களில் மோனே மார்கல் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த புஜாரா ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி - முரளி விஜய் ஜோடி பொறுப்பாக ஆடியது. அணி எண்ணிக்கை 107 ஆக இருக்கும்போது 46 ரன்களில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 10 ரன்களிலும், விக்கெட் கீப்பர் பர்தீவ் படேல் 19 ரன்களில் அவுட்டாகினர். அப்போது அணியின் எண்ணிக்கை 164 ஆக இருந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கோலி அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 85 ரன்களுடனும், பாண்ட்யா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தென் ஆப்ரிக்காவை விட 152 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தென்ஆப்ரிக்கா அணி சார்பில் கேசவ் மகராஜ், மார்கல், ரபடா, கிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முன்னதாக கேசவ் மகராஜின் விக்கெட், இந்திய பந்து வீச்சாளர் முகம்மது ஷமிக்கு 100-வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது. 29 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல் கல்லை ஷமி எட்டியிருக்கிறார்.

இந்திய வீரர்களில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கபில் தேவ். அவர் 25 டெஸ்ட்களில் 100 விக்கெட்களை எடுத்தார். அடுத்தபடியாக இர்பான் பதான் 28 டெஸ்ட்களில் 100 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த இந்தியராக முகம்மது ஷமி பெயர் இடம் பெறுகிறது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குறைந்தபட்சம் தலா 10 டெஸ்ட் இன்னிங்க்ஸ்கள் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் இடையே இன்னொரு புள்ளி விவரம் சேகரிக்கப்பட்டது. அதாவது இந்த வீரர்களில் உள்நாட்டும் போட்டிகளில் சிறப்பாக வெளியாடி, வெளிநாட்டுப் போட்டிகளில் மோசமான ரன்குவிப்பை யார் செய்திருக்கிறார்கள் என பார்த்தால், ரோகித் சர்மாதான் அந்த மோசமான சாதனைக்கு சொந்தக் காரர்!

ரோகித் சர்மாவின் உள்நாட்டு ரன் சராசரிக்கும் வெளிநாட்டு ரன் சராசரிக்கும் இடையிலான வித்தியாசம் 60.89 ஆகும்.

 

Rohit Sharma Mohammed Shami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment