புதிய வரலாறு படைத்த இந்திய அணி: தென்னாப்பிரிக்கா மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது!

இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, முதன்முறையாக தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று ஆடிய வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ,  ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று(13.2.18) நடைபெற்றது. ஏற்கனவே  இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது.  இதனைத்தொடர்ந்து போர்ட் எலிசபெத்தில் நடந்த 5 ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில்  அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால், இந்திய அணி, தென்னாப்பிரிக்கா மண்ணில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில், ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஷாம்சி இடம்பிடித்திருந்தார். தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 23 பந்தில்   34 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரோகித் சர்மா உடன் கேப்டன்  விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.  இந்த ஜோடியிஒன் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ரோகித் சர்மா 50 பந்தில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்தார்.

தொடர்ந்து ஆடிய . ரோகித் சர்மா, தனது 17-வது சதத்தை நிறைவு செய்தார். 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் சேர்த்து ஆபரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்பு வந்த தோனி, ஷ்ரேயாஸ்  அய்யர்,  ஹர்திக் பாண்டியா  ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய அணி  7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  தென்ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் அம்லாவும், எய்டன் மார்க்ரமும் நிதானமாக ஆடிய அணிக்கு வலு சேர்த்தன. டுமினி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் அவுட் ஆகியது தென்னாப்பிரிக்கா ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்பு களமிறங்கிய அம்லா  சிறப்பாக விளையாடி அரைசதம்  கடந்தார்.71 ரன்கள் போது அம்லா  அவுட் ஆகினார். அதன் பின்பு வந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் இந்திய அணியில் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இறுதியாக தென்னாப்பிரிக்கா  அணி தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில்  201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெற்றத்தில்லை.  ஆனால், தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. முதன்முறையாக தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. அத்துடன், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இந்திய அணிக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close