இந்தியா vs தென்னாப்பிரிக்கா 5வது ஒருநாள் போட்டி Live Cricket Score

India vs South Africa 5th ODI Live Score Card

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபத்தில் இன்று துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியை மட்டும் வென்றுவிட்டால், முதன்முதலாக தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று சரித்திரம் படைக்கலாம்.

இந்த நிலையில், இன்று ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் க்ரிஸ் மோரிசுக்கு பதிலாக ஷ்மசி சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித்தும், தவானும் நிதானமான தொடக்கத்தை ஏற்படுத்தினர். 23 பந்தில் 34 ரன்கள் எடுத்திருந்த போது தவான் ஆட்டமிழந்தார். பிறகு கோலி 36 ரன்னில் ரன் அவுட்டாக, ரஹானேவும் 8 ரன்களில் ரன் அவுட்டானார்.

ஆனால், தொடர்ந்து சொதப்பி வந்த ரோஹித் முதன் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசி அசத்தியுள்ளார். தனது 17வது ஒருநாள் சதத்தை அவர் இன்று நிறைவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது சதம் இது.

இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ietamil-ல் உடனுக்குடன் நீங்கள் கண்டு களிக்கலாம்.

×Close
×Close