3 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தோனியுடன் கொண்டாடிய வீரர்கள்!

தென்னாப்பிரிக்கா அணிக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றதை, வீரர்கள் தோனியுடன் இணைந்து கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 தொடர் கொண்ட டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன் பின்பு, முழு வீச்சுடன் களம் இறங்கிய இந்திய அணி, ஜோக்கன்ஸ்பர்கில் நடைப்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசாத்தியமாக விளையாடி வெற்றியை பதிவு செய்தது.

ஜோக்கன்ஸ்பர் பிட்ச் குறித்து, முன்னாள் கிரிக்கெய் வீரர்கள் பலர், கருத்து தெரிவித்திருந்த வகையில், இந்திய அணி அபாரமாக ஆடி, வெற்றி பெற்றது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய அணி அடுத்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடயுள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார்.

தோனி வருகையும், இந்திய கிரிக்கெட் அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் ஒன்றாக அமைந்ததால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த மகிழ்ச்சியை தோனியுடன் கொண்டாடியுள்ளனர். சனிக்கிழமை இரவு நடைபெற்ற இந்த பார்ட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, தோனி ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

Amazing last night with the boys ❤️ @virat.kohli @mahi7781 @yuzi_chahal23 @rahulkl

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

இந்த புகைப்படத்தை தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாண்ட்யா ”மறக்க முடியாத இரவு” என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், விராத் கோலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ட்ரெஸிங் ரூமில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, ”மிகவும் பெருமைப்படக் கூடிய தருணம்” என்று கூறியுள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close