Advertisment

மாஸ்டர்ஸ் கபடி: இந்தியா வெற்றி, இறுதிப் போட்டியில் ஈரானுடன் இன்று மோதல்

தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாஸ்டர்ஸ் கபடி: இந்தியா வெற்றி, இறுதிப் போட்டியில் ஈரானுடன் இன்று மோதல்

India vs South Korea Kabaddi Masters 2018: மாஸ்டர்ஸ் கபடி போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 நாடுகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில மோதின. இதில், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென் கொரியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஆட்டத்தில் கென்யா அணியை 50-15 என்ற புள்ளிகள் கணக்கில் தட்டித் தூக்கியது அஜய் தாகுர் தலைமையிலான இந்திய கபடி அணி. லீக் சுற்றில் 100 சதவிகிதம் முழுமையான வெற்றிப் பெற்றிருக்கும் இந்திய அணி, பரம வைரியான பாகிஸ்தானை இரு போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. நட்சத்திர வீரர்களால் நிரம்பி வழியும் இந்திய அணி, முழு பலத்துடன் இன்று களமிறங்க உள்ளது.

Advertisment

லீக் சுற்று முடிந்த நிலையில் இன்று அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி மோதும் போட்டி குறித்த விவரங்களை பார்க்கலாம்,

இந்தியா vs கொரியா கபடி மாஸ்டர்ஸ் ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

ஜூன் 29, 2018.

இந்தியா vs கொரியா கபடி மாஸ்டர்ஸ் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

துபாய்.

எத்தனை மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது?

இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு.

தொலைக்காட்சியில் எந்த சேனலில் இப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது?

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்

ஆன்லைனில், இந்தியா vs கொரியா மாஸ்டர்ஸ் கபடி போட்டியை எப்படி பார்ப்பது?

Hotstar-ல் காணலாம்.

இந்தியா- தென் கொரியா கபடி ரிசல்ட்:

இந்தப் போட்டியில் இந்திய அணி  36-20 என தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை ஈரான் பந்தாடியது. இன்று (ஜூன் 30) இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஈரானும் மோதுகின்றன.

முன்னதாக நேற்று தென் கொரியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இந்தியா பின் தங்கியிருந்தது. தொடர்ந்து இந்திய கேப்டன் அஜய் தாக்கூர் தனது அபாரமான ரெய்டு மூலமாக புள்ளிகளை குவிக்க, இந்தியா சுலபமாக வென்றது. அஜய் தாக்கூர் மட்டுமே 11 புள்ளிகளை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இறுதிப் போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment