டெல்லி கிரிக்கெட் டெஸ்ட் டிரா : தொடரை 1:0 என வென்றது இந்தியா

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று, இந்தியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் டிராவில்...

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று, இந்தியா வெற்றி பெற 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆனால் டிராவில் முடிந்தது.

இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேனான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. நாக்ப்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. டெல்லி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருந்தது.

கடைசி நாளில் இலங்கை அணி வெற்றி பெற 379 ரன்கள் தேவை. கையில் ஏழு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக இலங்கை வீரர்கள் சிரமப்பட்டனர். எனவே அவர்கள் போட்டியை டிரா செய்ய முயன்றார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆட்ட நேர முடிவில் இலங்கை 5 விக்கெட்டுகளைஇழந்து 299 ரன்கள் சேர்த்தது. எனவே டெல்லி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

ஏற்கனவே நாக்பூர் டெஸ்டில் இந்தியா வென்றதால், தொடரை இந்தியா 1: 0 என வென்றது.

×Close
×Close