Advertisment

IND vs SL : டி20 தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்தியா; 3-வது போட்டியிலும் இலங்கை தோல்வி

Tamil Sports Update : இலங்கை அணியுடனான டி 20 தொடரை 3- 0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs SL : டி20 தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்தியா; 3-வது போட்டியிலும் இலங்கை தோல்வி

IND vs SL 3rd T20 Match Update : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி 24-ந் தேதி லக்னோவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

Advertisment

இதனையடுத்து 2-வது டி20 போட்டி தர்மசாலா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் குவித்தது. 184 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ அய்யர், சாம்சன் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

இதனால் இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், 3-வத மற்றும் கடைசி டி20 போட்டி இன்று அதே தர்மசாலா இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றிவாகை சூடி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களமிறங்கும்

அதே சமயம் முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி தோல்வியை சந்தித்தாலும் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இலங்கை அணி பேட்டிங் பாராட்டுமு் வகையில் இருந்தது. அதேபோல் தொடக்கத்தில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சற்று திணறித்தான் போனார்கள். ஆனால் நடுப்பகுதியில் பந்துவீசியவர்கள் சொதப்பியதாலும், பீடிங்கில் சோடைபோனதாலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றுவிட்டது.

ஏற்கனவெ 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்டாலும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக போராடும். அதே சமயம் இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இந்த போட்டியில், மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. 2- போட்டி முடிந்து வீரர்களுக்கு ஓய்வு இல்லாமல் அடுத்த நாளே 3-வது போட்டி நடைபெறுவதால், இந்திய அணியில் இதுவரை களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், மயங்க் அகர்வால், குல்தீப் யாதவ், அவேஷ் கான் , முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்

இலங்கை அணி:

பதும் நிஷங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, கமில் மிஷாரா, தினேஷ் சந்திமால், தசுன் ஷனகா, சமிக கருணாரத்னா, துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமாரா, தனஞ்சய, தனஞ்சய, டி எஸ். ஜெஃப்ரி வான்டர்சே, மஹீஷ் தீக்ஷனா, ஆஷியன் டேனியல், ஜனித் லியனகே

இலங்கை பேட்டிங்

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குணதிலகா டக் அவுட் ஆக, நிசங்கா 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த அசலங்கா 4 ரன்களிலும், லியனாகே 9 ரன்களிலும் அவுட் ஆக, இலங்கை அணி 4 விக்கெட்களுக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சண்டிமல் மற்றும் ஷனாகா இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சண்டிமல் நிதானமாக ஆட, ஷனாகா அதிரடியாக ஆடினார். சண்டிமல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஷனாகா 38 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார். அவர் 9 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கருணரத்னே 12 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில், ஆவேஷ் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் 5 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சற்று அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 18 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ், தீபக் ஹூடா ஜோடி அற்புதமாக விளையாடி ரன்களை சேர்த்தது. தீபக் ஹூடா 21 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார். பின்னர் ஸ்ரேயாஸ் உடன் சேர்ந்த ஜடேஜாவும் அற்புதமாக விளையாடினார். இதனால், இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து, 148 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை வென்றது. ஸ்ரேயாஸ் ஐயர் 73 ரன்களும், ஐடேஜா 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்ரேயாஸ் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 73 ரன்கள் எடுத்தார்.

இலங்கை பந்துவீச்சில் லஹிரு குமாரா 2 விக்கெட்களையும், சமீரா மற்றும் கருணரத்னே தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியுடனான டி 20 தொடரை ஒயிட் வாஷ் செய்துள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Indian Cricket Team T20
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment