Advertisment

இந்தியா அபார வெற்றி, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது

இந்தியாவின் ஹனுமா விஹாரி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆனால் தொடர் நாயகன் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை. இது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சின்ன கேள்விகளையும் எழுப்பியது.   

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியா அபார வெற்றி, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது

TN Live updates ; kholi 50 test captaincy

மேற்கிந்திய தீவுகளுகளுக்கு  சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .

Advertisment

முதல் டெஸ்டில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி  கிங்க்ஸ்டனில் ஆகஸ்ட் முப்பதாம் தேதி தொடங்கியது.

இந்த இரண்டாவது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்களை குவித்திருந்தது. இதில், அதிகப்பட்சமாக  ஹனுமா விஹாரி 111 ரன்களை சேர்த்தார். இது, விஹரியின் முதல் சதம் என்பது குறிப்பிட வேண்டிய விஷயங்களில் ஒன்று. மேலும், விராத் கோலி 76 ரன்களும், அகர்வால் 55 ரன்களும் எடுத்து அணியின் வலுவான நிலைக்கு உறுதுணையாய் இருந்தனர்

பின்பு, 416 ரன் என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் ஆரம்ப நிலையிலேயே மிகவும் தடுமாறின. இறுதியில் அந்த அணி வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்து ஆள் அவுட் ஆனது. இதனால், இந்திய முதல் இன்னிங்க்ஸில் 299 ரன்கள் முன்னிலை அடைந்தது . இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு பாலோ-ஆனை வழங்காமல் தனது  2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில்; கே.எல்.ராகுல் 6 ரன்களிலும் மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் புஜாரா 27 ரன்களிலும் கேப்டன் விராத் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டத்தை விட்டு வெளியேறினர்.பிறகு வந்த  ரஹானேவும் விஹாரியும் நிலைத்து நின்று ஆடினர்.  168 ரன்களாக எடுத்திருந்த நிலையில் தனது ஆட்டத்தை டிக்ளர் செய்தது இந்திய. அணி சார்பில் ரஹானே 64 ரன்களுடனும் விஹாரி 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்பு, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடர்ந்த  மேற்கிந்திய தீவுகள் அணி, வெறும் 210 ரன்கள் மட்டும் எடுத்து  தனது  அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி பௌலிங் சார்பில், முஹமத் சமி மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனால், இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

இந்தியாவின் ஹனுமா விஹாரி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். ஆனால் தொடர் நாயகன் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை. இது, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சின்ன கேள்விகயையும் எழுப்பியது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment