India vs West Indies World Cup 2019 Match Date, Players List, Weather Forecast, Live Streaming Details: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

India vs West Indies (Ind vs WI) World Cup 2019 Match Date, Time, Players List, Weather Forecast: இந்தியா vs...

Ind vs wi World Cup 2019 Match Date, Time, Players List, Weather Forecast: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.27) மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டியில், இரு நண்பர்கள் மோதவுள்ளனர். சாரி… இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன.

5 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி, நான்கில் வெற்றிப் பெற, நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தப் போட்டியிலும் வெற்றிப் பெற்றால், ஏறக்குறைய அரையிறுதியை நெருங்கி விடலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக் கோப்பை அரையிறுதி ரேஸில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டது. 6 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி, ஒன்றில் மட்டுமே இதுவரை வென்றுள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக கண்டு களிக்கலாம். ஆன்லைனில் ஹாட் ஸ்டார் மூலம் போட்டியைக் காணலாம். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.

தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் பிரத்யேக லைவ் கமெண்ட்ரியுடன் நீங்கள் ஆட்டத்தை ரசிக்கலாம்.

மழைக்கான வாய்ப்பு – 0%

ஈரப்பதம் – 84%

காற்று – 3 km/h

அதிகபட்ச வெப்பநிலை – 25 டிகிரி செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை – 11 டிகிரி செல்சியஸ்

இன்றைய போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close