Advertisment

சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் : பாராட்டு மழையில் கிரிக்கெட் வீரர் நடராஜன்

Tamil Sports Update : கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்

author-image
WebDesk
New Update
சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் : பாராட்டு மழையில் கிரிக்கெட் வீரர் நடராஜன்

indian Cricket Player Natarajan Open New Cricket Ground In His Village: தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன். தனது சொந்த ஊரில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கியுள்ளது குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர்.

Advertisment

ஐபிஎல் கிரக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட்  விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டு பெற்றவர் டி.நடராஜன். தமிழகத்தில் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இவர், தனது விடா முயற்சியின் மூலம் கிரிக்கெட் போட்டிகளில் பிரபலமான வீரராக உருவெடுத்துள்ளார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக், மற்றும் ஐபிஎல் கிரக்கெட் தொடரில் இறுதிக்கட்ட ஓவர்களில் ஏர்க்கர் பால் வீசி பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். மேலும் ஐதரபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரின் நன்மதிப்பை பெற்ற நடராஜன், கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் வலை பயிற்சி பந்துவீ்ச்சாளராக இடம் பெற்றார்.

அப்போது அந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணம் விலகியதை தொடர்ந்து நடராஜன் ஆடும் வெலன் அணியில் சேர்க்கப்பட்டார். அதே தொடரில் டெஸ்ட, ஒருநாள் மற்றும் டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இடையில் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடராஜன் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானார்.

publive-image

இதனால் கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடாத அவர், தற்போது உடல்நலம் தேறி மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். இதனிடையே டி20 உலககோப்பை தொடரில் நடராஜன் சேர்க்கப்படாதது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் இதை கண்டுகொள்ளாத நடராஜன் தொடர்ந்து தனது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், எனது கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மைதானத்திற்கு *நடராஜன் கிரிக்கெட் மைதானம் (NCG) என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் எனது சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானத்தை அமைத்துள்ளேன் கடவுளுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Sports Update Natarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment