டிசம்பர் 5, முதல் டெஸ்ட் போட்டி: இந்திய வீரர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்? ஜாலி ரிப்போர்ட் #INDvsSA

நம்மள வேற, 'அடுத்த லக்ஷ்மண்-னு' சொல்லுறாய்ங்களே!! இந்தவாட்டியும் அடிக்கலைனா 'அடுத்த ஜென்மத்துல பார்ப்போம்-னு' சொல்லிடுவாய்ங்களோ!?

அன்பரசன் ஞானமணி

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் வருகிற 5ம் தேதி தொடங்குகிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி சந்திக்கவிருக்கும் மிகக் கடுமையான முதல் டெஸ்ட் தொடர் என்றால் இது தான். ஒருநாள், டி20 என போட்டிகள் இருந்தாலும், முதலில் டெஸ்ட் போட்டிகள் தான் தொடங்குகிறது.

நாளை மறுநாள் தொடங்கவுள்ள சவாலான முதல் டெஸ்ட் போட்டி பற்றி, இந்திய அணி வீரர்களின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும், என்ற ஜாலி கற்பனை கட்டுரை இது.

முரளி விஜய் – கடவுளே எனக்கு எப்படியாவது ஒப்பனிங் ஆட வாய்ப்பு கிடைக்கணும்… அப்படி வாய்ப்பு கிடைச்சிடுச்சுனா, கடவுளே எனக்கு அதுவே போதும்.

ஷிகர் தவான் – நாம ஒப்பனிங் இறங்குவது கன்ஃபார்ம் தான். ஆனா, சரியா விளையாடுல-னா துபாய் ஏர்போர்ட்ல குடும்பத்தை விட்டுட்டு வந்த மாதிரி, தென்னாப்பிரிக்காவுல கிரிக்கெட்டை விட்டுட்டு போயிட வேண்டியது தான்.

லோகேஷ் ராகுல் – தமிழனுக்கா, கன்னடனுக்கானா எப்படியும் கன்னடனுக்கு தான் நியாயம் கிடைக்கும். அப்போ நமக்கு தான் ஓப்பனிங் சான்ஸ்.

சத்தேஷ்வர் புஜாரா – முதல் ரன்னையே 100 பாலுக்கு அப்புறம் தான் எடுக்குறோம்… சவுத் ஆப்ரிக்காவை டெத் ஆக்குறோம்.

அஜின்க்யா ரஹானே – நம்மள வேற, ‘அடுத்த லக்ஷ்மண்-னு’ சொல்லுறாய்ங்களே!! இந்தவாட்டியும் அடிக்கலைனா ‘அடுத்த ஜென்மத்துல பார்ப்போம்-னு’ சொல்லிடுவாய்ங்களோ!?

விராட் கோலி – மேட்ச் ஆரம்பிக்குறதுக்குள்ள அனுஷ்காவை ஊருக்கு பொட்டியை கட்டி விட்டுடனும்.

ரோஹித் ஷர்மா – நல்ல வேளை… ஸ்ரீலங்காவுக்கு எதிரா டபுள் செஞ்சுரியை அடிச்சு வச்சோம்.. அப்டியே டி20-லயும் ஒரு காட்டு காட்டுனோம்… அதை வச்சு ஒரு மூணு மாசம் ஓட்டிக்கலாம். இங்க அடிக்கலனாலும் பரவால..!

ஹர்திக் பாண்ட்யா – நம்மள ஒவ்வொரு தடவையும் ரொம்ப நம்புறாய்ங்களே!. புதுசா ஒரு ஹேர் ஸ்டைல் கட்டிங் பண்ணி, நா பாண்ட்யாவே இல்லன்னு சொல்லிட வேண்டியது தான்.

ரித்திமான் சாஹா – நாம அடிச்சா என்ன.. அடிக்காட்டி என்ன… நமம்ள டீம விட்டு தூக்க மாட்டாய்ங்க. டீமுக்கு அடுத்த தோனி கிடைக்கும் வரை காலத்தை ஓட்டி விடலாம். ஆனா, அதுக்கு தான் சான்ஸே இல்லையே.. ஐ ஜாலி!

அஷ்வின் & ஜடேஜா – பங்காளி… இவைங்க எப்பவுமே இப்படித் தான். டெஸ்ட்டுக்கு மட்டும் நம்மள டேஸ்ட் பண்ணிட்டு வுட்டுடுவானுங்க… (ரஜினி ரசிகர் அஷ்வின் – எல்லாம் மாயா!)

புவனேஷ் குமார்

இந்தியன் பேன்ஸ் – கமான் ஸ்விங்கர்! கமான் ஸ்விங்கர்!

புவனேஷ் – ஐயோ… நம்மள ரொம்ப வரவேற்குராய்ங்களே! ஒழுங்கா பவுலிங் பண்ணலைனா பச்ச பச்ச வார்த்தைல திட்டுவானுங்களோ!?

பார்த்திவ் படேல் – நானும் ரவுடி தான்… நானும் ரவுடி தான்… நானெல்லாம் 2003 வேர்ல்ட் கப்புலயே சும்மாவே உட்கார்ந்தவன் தெரியுமா. இதெல்லாம் எனக்கு ஜுஜூபி!.

பும்ரா (முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இடம்)

கிரிக்கெட் ரசிகர்கள் – இவன் அதுக்கு சரியா வரமாட்டான்…

பும்ரா – எதுக்குயா சரியா வரமாட்டேன்…

ரசிகர்கள் – அட! நீ அதுக்கு சரியா வரமாட்ட விடுப்பா…

பும்ரா – யோவ்! அதான் எதுக்கு சரியா வர மாட்டேன்னு சொல்லுங்கய்யா…

ரசிகர்கள் – அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டப்பா.. போப்பா

பும்ரா – எதுக்கு சரியா வரமாட்டேன்னு கடைசி வர சொல்ல மாட்டேங்குறாங்களே!?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close